கம்பராமாயணம் 5534 · சுந்தர 7.57

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சொல்லிட எளியது அன்று - (அப்பருவத் தேவர்கள் மீண்டும் இராவணனிடம் அந்தக் குரங்கு செய்த அழிவும் ஆற்றலும் எங்களால்) சொல்லுவதற்கு எளியன அல்ல; சோலையை - அந்த அசோகவனத்தை; காலின் கையின் புல்லொடு துகளும் இன்றிப் பொடிபட நூறி - தன் கால்களாலும் கைகளாலும் புற்களும் அவற்றில் ஒட்டிக் கொண்டிருக்கும் தூசியும் இல்லாதபடி பொடியாகும்படி அழித்து; பொன்னால் வில்லிடு வேரம் தன்னை வேரொடும் வாங்கி வீச - பொன்னால் ஒளி வீசும் (வேள்வி மண்டபமான) சயித்தத்தை அடியோடு எளிதில் பிடுங்கி வீசி எறிய, சில் இடம் ஒழிய - ஒரு சிறு இடமே நீங்கலாக; தெய்வ இலங்கையும் சிதைந்தது என்றார் - தெய்வத் தன்மையுடைய இலங்கை நகரமும் (பெரும் பாலும்) அழிந்துவிட்டது என்று கூறினர்

சில் இடம், பிராட்டி இருந்த சிறு இடத்தைக் குறித்தது. இலங்கை, தெய்வக் கம்மியனான விசுவ கன்மாவால் அமைக்கப்பட்டதாகலின் தெய்வ இலங்கை எனப் பட்டது. வேரம் - சயித்தம்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'It is not easy to describe: with feet and hands he pounded the grove
  2. to powder, leaving not even grass or dust, and the shrine
  3. that blazes with gold he wrenched out by the roots and hurled,
  4. and divine Ilaṅkai too lies ruined, save for one small spot,' they said.

What the poem says

The season-gods go on: the monkey has ground the grove to nothing, not even a blade of grass left, and has torn out the golden sacrificial hall and thrown it, so that the city itself is wrecked.

The 'small spot' that was spared is the place where Cītai sits. Ilaṅkai is called divine because it was built by Vicuvakaṉmā, the architect of the gods.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'colliṭa eḷiyatu aṉṟāl cōlaiyaik kālil kaiyil
pulloṭu tukaḷum iṉṟip poṭipaṭa nūṟi, poṉṉāl
vil iṭu vēram taṉṉai vēroṭu vāṅki vīca
cil iṭam oḻiyat teyva ilaṅkaiyum citaintatu'eṉṟār.