கம்பராமாயணம் 5535 · சுந்தர 7.58

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கோடரம் ஒன்றே - (இவ்வாறு சொல்லக் கேட்ட இராவணன்) குரங்கு ஒன்றே; ஆடகத் தருவின் சோலை - பொன்மயமான மரங்களை உடைய சோலையை, பொடிபடுத்து - தூளாகும் படி அழித்து; அரக்கர் காக்கும் தேடு அரும் வேரம் வாங்கி - அரக்கர்கள் காவல் புரியும் எங்கும் தேடிக் காண்பதற்கு அரிய சயித்தத்தைப் பறித்து; இலங்கையும் சிதைத்தது - இலங்கையையும் அழித்து விட்டது; இராக்கதர் கொற்றம் நன்று - அரக்கர்களுடைய வீரம் நன்றாக இருக்கின்றது; இது சொற்றல் மூடரும் மொழியார் என்ன - இவ்வாறான பேச்சை அறிவீனரும் சொல்லமாட்டார்கள் என்று; மன்னனும் முறுவல் செய்தான் - அரக்கர்க்கு அரசனான இராவணனும் புன் சிரிப்புக் கொண்டான்.

மன்னன் முறுவல் செய்தது; எள்ளற் குறிப்பு. பருவத் தேவர்களின் பேச்சை நம்பவில்லை இராவணன் என்பதை அவன் முறுவல் காட்டுகின்றது. கோடரம் - குரங்கு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'It ground to dust the grove of golden trees, and the shrine guarded by rākṣasas,
  2. peerless anywhere, it tore out, and it wrecked Ilaṅkai too — ah!
  3. a single monkey! Fine indeed is the valour of the rākṣasas! Such words
  4. not even fools would utter' — so he said, and the king smiled.

What the poem says

Irāvaṇaṉ does not believe the report. One monkey, he repeats mockingly, destroyed the golden grove, the matchless hall and the city itself? What fine heroes the rākṣasas must be! Not even a fool would talk like this.

His smile is one of scorn: he takes the season-gods' story as nonsense.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṭakat taruviṉ cōlai poṭi paṭuttu, arakkar kākkum
tēṭu aru vēram vāṅki, ilaṅkaiyum citaittatu ammā!
kōṭaram oṉṟē, naṉṟu itu irākkatar koṟṟam coṟṟal
mūṭarum moḻiyār; eṉṉa maṉṉaṉum muṟuval ceytāṉ.