கம்பராமாயணம் 5536 · சுந்தர 7.59

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேவர்கள் - (இராவணன் இகழ்ந்ததைக் கண்ட) பருவத் தேவர்கள்; பின்னும் - மேலும், இராவணனை நோக்கி; மன்ன ! - அரசனே!; அதன் உருச் சுமக்கும் - அந்தக் குரங்கின் உடலைத் தாங்கவல்ல; திண்மை - வலிமை உடைய; பூவலயத்தை அன்றோ புகழ்வது - பூமியை அல்லவா புகழ வேண்டியது! அக்குரங்கை - அந்தக் குரங்கை; புலவர் போற்றும் - தேவர்கள் வாழ்த்துகின்ற; மூவரின் ஒருவன் - மும்மூர்த்திகளில் ஒருவனே; என்று புகல்கினும் - என்று சொல்வதும்; முடிவுஇலாத ஏவம் - முடிவிலாத குற்றமாகும்; ஐய - ஐயனே!; இன்னே காணுதி - இப்போதே காண்பாய்; என்றார் - என்று சொன்னார்கள். அக்குரங்கின் வடிவைச் சுமக்கும் திண்மை உடைய பூமி புகழ்வதற்குரியது. தேவர்கள் வாழ்த்தும் மும்மூர்த்திகளுள் ஒருவன் அனுமன் என்று கூறினும் குற்றம். புலவர் - தேவர் ஏவம் - குற்றம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The gods spoke again: 'O king! Surely it is the strong
  2. earth that bears that creature's form which deserves praise! Even to say
  3. that it is one of the Three whom the immortals extol
  4. would be a boundless fault; my lord, you shall see that monkey right now.'

What the poem says

The season-gods insist. What deserves praise, they say, is the earth itself, strong enough to carry the weight of such a creature.

To call this monkey one of the Trimūrti — Brahmā, Viṣṇu and Śiva, praised by the gods — would actually be to understate him, a grave error. Irāvaṇaṉ need not take their word for it: he will see the monkey for himself at once.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēvarkaḷ, piṉṉum'maṉṉa! ataṉ uruc cumakkum tiṇmaip
pūvalayattai aṉṟō pukaḻvatu! pulavar pōṟṟum
mūvariṉ oruvaṉ eṉṟu pukalkiṉum muṭivu ilāta
ēvam; akkuraṅkai aiya! kāṇuti iṉṉē'eṉṟār.