கம்பராமாயணம் 556 · பால 10.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பகல் கதிர் மறைய - பகற்பொழுதிற்குக் காரணமான கதிரவனின் ஒளிக்கதிர்கள் மறையவும்; வானம் பாற்கடல் கடுப்ப - வானம் திருப்பாற்கடலைப் போன்று காட்சியளிக்கவும்; மிதிலை மாடத்து உம்பரில் - மிதிலை நகரின் உப்பரிகை வீடுகளின் மேல்; துவன்றி நின்ற - நெருங்கிய; நீண்ட துகில் கொடி - நீளமான கொடிச் சீலைகள்; முகில் குலம் - மேகக் கூட்டம்; தடவும் தோறும் - (தம்மை வந்து) வருடும் பொழுதும்; நனைவன - அதன் நீரினால் நனைவனவாகவும்; முகிலின் சூழ்ந்த - (அம்) மேகம்போலச் சூழ்ந்து கொண்ட; அகில்புகை கதுவும் தோறும் - அகிற் கட்டையின் புகை (தம்மில் வந்து) படியும் பொழுதும்; புலர்வன - உலர்வனவாகவும்; ஆடக் கண்டார் - ஆடுதலைப் பார்த்தார்கள்.
கொடிகளின் நெருக்கம், மிகுதி, மேகக் கூட்டத்தை அளாவும் உயர்ச்சி, அகிற்புகையின் மிகுதி ஆகியன இதில் உணர்த்தப் பெறுகின்றன. அணி: தொல்லுப்பெறலணி-துகிற்கொடி மேகங்களால் நனைவதும், அகிற் புகையால் உலர்ந்து பழைய நிலையை அடைவதும் இவ்வணியாகும். பாற்கடலும் துகிலும்: 'பாற்கடல் போன்ற துகில்' என்றதால் துகில் வெண்ணிறமுடையது என்பது தெரிகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Hiding the rays of the daytime sun and making the sky look like the milk ocean, the long
- cloth banners crowded on the tops of Mitilai's mansions
- grew wet each time the hosts of clouds brushed them, and each time the aloe-wood smoke, gathered round like clouds,
- caught them, they dried again — and they saw them dancing.
What the poem says
The white cloth banners on Mitilai's mansions are so many and so high that they hide the sun and turn the sky white as the Ocean of Milk. They reach into the clouds and get soaked, and then the thick smoke of aloe-wood incense rising from the houses dries them again. The verse shows how crowded, tall and wealthy the city is.