கம்பராமாயணம் 555 · பால 10.3

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தயிர் உறு மத்தில் காம சரம் படத் தலைப்பட்டு ஊடும்
உயிர் உறு காதலாரின், ஒன்றை ஒன்று ஒருவகில்லாச்
செயிர் உறும் மனத்த ஆகித், தீத் திரள் செங்கண் சிந்த,
வயிர வாள் மருப்பு யானை, மலை என மலைவ கண்டார்.

பொருள் · Meaning in Tamil

காம சரம்பட- மன்மதனது அம்பு வந்து தாக்குவதால்; (மனம் கலங்கு) தயிர் உறு மத்தின் - தயிர் கடையும் மத்தைப் போல; ஊடும் - (புணர்ச்சியின்பத்திற்குப்பின் ஊடே விளையாட்டாக ஒருவரைஒருவர் பிணக்குக் காட்டி; தலைப்பட்டு - (ஒருவரோடு ஒருவர் புணரத் தொடங்கி, உயிர் உறு காதலாரின் - (ஒருவர்க்கு ஒருவர்) உயிரைப் போன்ற அன்புள்ள மனைவி கணவன் போல; வயிர வால் மருப்புயானை - வயிரம் போன்ற உறுதியும் வெண்மையான தந்தங்களும் உடைய யானைகள்; செயிர் உறு - கோபம் மிகுந்த; மனத்த ஆகி - மனத்தை உடையவனாய்; செங்கண் தீத்திரள் - (கோபத்தால்) சிவந்த கண்கள் நெருப்புத்திரளை உமிழும்படி; ஒன்றை ஒன்று - ஒன்றை ஒன்று விட்டு; ஒருவகில்லா - நீங்காமல்; மலை என மலைவ - இருமலைகள் (ஒன்றோடு ஒன்று போர் செய்வன) போலப் போர் செய்வதை; கண்டார் - பார்த்தார்கள்.

யானைப்போர்: அந் நகர மைந்தர்களால் வேடிக்கைக்காக விடப்பட்ட யானைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிடுகின்றன. அணி: உவமை யணி -ஆண்பெண் தம் மனத்தில் பகையுணர்ச்சி இல்லாதிருக்கவும் புணர்ச்சிக் காலத்து ஒருவரோடு ஒருவர் பிணக்குக் கொள்வது போல, யானைகள் தம் மனத்தில் பகை கொள்ளாதிருக்கவும் வெளிப் பார்வைக்கு விளையாட்டாகப் பகையை விளைத்துக்கொண்டு போர் செய்தன. மத்து, மன்மத பாணம் - மத்து தயிரைக் கலக்குவது போல மன்மதனது அம்பு மனத்தைக் கலக்குகிறது. மலை, யானை: பருமை, வலிமை, கம்பீரமான தோற்றம், மதநீர் பொழிதல் ஆகியன பற்றி மலையானது யானைக்கு உவமையாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like lovers dear as life to each other, who, churned like curds by the churning-stick as Kāma's arrows strike, come together and then quarrel,
  2. never letting go of one another,
  3. their minds swelling with rage, their red eyes scattering showers of fire,
  4. elephants with bright tusks hard as diamond, clashing like mountains — these they saw.

What the poem says

Inside the city the travellers watch elephants that the young men of Mitilai have set to fight for sport. The beasts lock together and will not let go, eyes red with fury, like two mountains colliding. Yet there is no real hatred in it. Kampaṉ compares them to lovers who, stirred by Kāma's arrows as curds are stirred by the churn, make love and then quarrel in play. The fight is all on the surface.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tayir uṟu mattiṉ kāma caram paṭat talaippaṭṭu ūṭum
uyir uṟu kātalāriṉ, oṉṟai oṉṟu oruvakillāc
ceyir uṟu maṉatta ākit, tīt tiraḷ ceṅ kaṇ cinta,
vayira vāḷ maruppu yāṉai, malai eṉa malaiva kaṇṭār.