கம்பராமாயணம் 554 · பால 10.2

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நிரம்பிய மாடத்து உம்பர் நீள்மணிக் கொடிகள் எல்லாம்,
தரம் பிறர் இன்மை உன்னித் தருமமே தூது செல்ல,
'வரம்பு இல் பேர் அழகினாளை மணம் செய்வான் வருகின்றான்' என்று
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின் ஆடக் கண்டார்.

பொருள் · Meaning in Tamil

பிறர் தரம் இன்மை உன்னி - (சீதையைத் திருமணம் செய்து கொள்வதற்கு இராமனைத் தவிர வேறு எவர்க்கும் தகுதி இல்லாமையை நினைத்து; தருமமே தூது செல்ல - அறக் கடவுளே தூது போய்த் தெரிவிக்க; வரம்பு இல் - அளவில்லாத; பேர் அழகினாளை - சிறந்த அழகுடைய சீதையை; மணம் செய்வான் - திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு (அந்த இராமன்); வருகின்றான் என்று - வருகின்றான் என்று மகிழ்ந்து; அரம்பையர் - தெய்வ மகளிர்; விசும்பின் ஆடும் - வானத்திலே மகிழ்ச்சியால் ஆடுகின்ற; ஆடலின் - ஆடலைப் போல; நிரம்பிய மாடத்து உம்பர் - (அந்த நகரத்தில் நிறைந்துள்ள மாடங்களையுடைய வீடுகளின் மேலே; நிரைமணிக் கொடிகள் - வரிசையாக உள்ள அழகிய கொடிகள்; எல்லாம் ஆட - யாவும் காற்றில் ஆடுவதை, கண்டார் - (அம்மூவரும்) பார்த்தார்கள்.

மாட மாளிகைகளின்மேலுள்ள கொடிகளின் காட்சி இதில் கூறப்பட்டுள்ளது. அணி: தன்மைத் தற்குறிப்பேற்றவணி - கொடிகள் அசைவதை, தரும தேவதை தூண்ட இராமன் சீதையை மணம்புரிய வருவதற்காகத் தெய்வப் பெண்கள் ஆடுவதாகக் குறித்தார். தருமத்தின் பயன்: உருவத்திலும் ஒருவர் மணம்புரிதல் தருமமாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All the rows of jewelled banners above the crowded mansions —
  2. as Dharma itself went as envoy, knowing there was no one else worthy,
  3. saying, 'He is coming to wed her of boundless beauty' —
  4. they saw them dancing like the celestial maidens who dance in the sky.

What the poem says

Another fancy about the banners. Dharma itself, knowing that no one but Irāmaṉ is worthy of Cītai, has carried the news that he is coming to marry her. The banners on the mansions sway like celestial dancers dancing for joy in the sky. The commentary adds that it is right for two people well matched in every way, beauty included, to marry.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nirampiya māṭattu umpar nirai maṇik koṭikaḷ ellām,
taram piṟar iṉmai uṉṉit tarumamē tūtu cella,
'varampu il pēr aḻakiṉāḷai maṇam ceyvāṉ varukiṉṟāṉ' eṉṟu
arampaiyar vicumpiṉ āṭum āṭaliṉ āṭak kaṇṭār.