கம்பராமாயணம் 553 · பால 10.1

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அந்த கடிநகர் -காவல் மிக்க அந்த மிதிலா நகரம், செய்யவள் - திருமகள்; மை அறு மலரின் நீங்கி - குற்றமற்ற தாமரை மலரை விட்டுப் பிரிந்து; யான் செய் மாதவத்தின் - நான் புரிந்த மிகப் பெரிய தவத்தால்; வந்து இருந்தாள் - என்னிடம் வந்து பிறந்துள்ளாள்; என்று செழுமணிக் கொடிகள் என்னும் - என்று கூறிப் பெரிய அழகிய கொடிகள் என்கின்ற; கைகளை நீட்டி - (தன்) கைகளை மேலும் கீழுமாக அசைத்துக் காட்டி (அவற்றால்); கமலம் செங்கண் ஐயனை - தாமரை போன்ற கண்களைக் கொண்ட இராமனை: ஒல்லை வா என்று - விரைவில் வந்து சேர்க என்று; அழைப்பது போன்றது - அழைப்பதைப் போன்றுள்ளது.

அணி: தன்மைத் தற்குறிப்பேற்றவணி. இராமன் அருகிலே செல்லும் போது அந்நகரத்து மதில்கள் மேலுள்ள கொடிகள் அசைவது, திருமகள் தன்னிடத்தில் சீதையாகப் பிறந்துள்ளாள் என்பதைக் குறிப்பாகச் சொல்லி அவளுக்குக் கணவனாவதற்கு ஏற்ற இராமனை விரைவிலே வந்து மணம் புரியுமாறு அந்த நகரம் கைகாட்டி அழைப்பது போன்றது. உருவகம்: கொடிகளாகிய கைகள். தாமரை மலரின் குற்றம்: மலர்தலும் பின் குவிதலும், வாட்டம் அடைதலும் ஆகும். யான் செய் மாதவத்தின் வந்து: திருமகள் தன் இயற்கையான இடத்தைவிட்டு விருப்பத்தோடு தன்னிடம் பிறப்பதற்கு ஏற்ற தகுதி உயர்ந்த தவத்தால் அமைய வேண்டும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Leaving her flawless flower, through the great penance I have done,
  2. the Red-gold Lady has come to dwell with me!' — so saying, with its rich jewelled banners
  3. for hands stretched out, that well-guarded city seemed to call
  4. to the lord with red lotus eyes, 'Come quickly!' — ah, how it seemed!

What the poem says

This verse opens the chapter "The Sights of Mitilai." As Irāmaṉ approaches, the banners waving on the city walls look like hands beckoning him. Kampaṉ imagines the city speaking. Lakṣmī, the "Red-gold Lady," has left her lotus and been born here as Cītai (Sītā), in reward for the city's great penance, and the city calls her destined husband to hurry and claim her.

This is the figure in which the poet gives a natural event a cause of his own invention. The lotus is called "flawless" here, though the commentary notes that a lotus does have faults: it opens, then closes and fades.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mai aṟu malariṉ nīṅki, yāṉ cey mā tavattiṉ vantu,
ceyyavaḷ iruntāḷ: eṉṟu, ceḻu maṇik koṭikaḷ eṉṉum
kaikaḷai nīṭṭi, antak kaṭi nakar, kamalac ceṅ kaṇ
aiyaṉai' ollai vā' eṉṟu aḻaippatu pōṉṟatu ammā.