கம்பராமாயணம் 552 · பால 9.86

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குணங்களால் உயர்ந்த - நற்குணங்கள் அனைத்திலும் மேம்பட்டவனும்; வள்ளல் - வள்ளலுமாகிய இராமன்; கோதமன் கமலத் தாள்கள் - கெளதமனுடைய தாமரைத் திருவடிகளை; வணங்கினன் - வணங்கி; வலம் கொண்டு ஏத்தி - வலமாகச் சுற்றித் துதிசெய்து; மாசு அறு கற்பின் மிக்க - குற்றமற்ற கற்பினால் மிக்க; அணங்கினை - அத்தெய்வப் பெண் போன்ற அகலிகையை; அவன் கை ஈந்து - அம் முனிவனது கையிலே ஒப்படைத்து; ஆண்டு அருந்தவனோடும் - அப்பொழுதே அரிய தவத்தையுடைய விசுவாமித்திரனோடு; வாசம் மணம் கிளர் - நறுமணம் கமழும்; சோலை நீங்கி - அச்சோலையை நீங்கி; மணிமதில் கிடக்கை - அழகிய நவமணிகள் இழைத்த (மிதிலா நகரின்) புறமதிலை; கண்டார் - (அம் மூவரும்) பார்த்தார்கள்.

இராமன் பண்பு: குணங்களால் உயர்ந்தவன்; (அருளை வாரி வழங்கும்) வள்ளல். அகலிகை பண்பு: மாசறு கற்பின் மிக்க அணங்கு; கற்பிலே குற்றம் இல்லாதவள்; தெய்வப் பெண் போன்றவள்; தவிர வணங்கத் தக்கவள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The bountiful one, high in every virtue, bowed at Kōtamaṉ's lotus feet,
  2. went round him and praised him, and gave the divine lady, rich in spotless chastity,
  3. into his hand; and then, with the great ascetic, leaving the grove
  4. where sweet fragrance rises, they saw the jewelled wall stretched out before them.

What the poem says

Irāmaṉ, generous and full of virtue, bows to Kautamaṉ, walks round him in reverence, and hands Akalikai back to him, now called a lady of spotless chastity and worthy of worship. Then the three leave the fragrant grove and come in sight of the jewelled outer wall of Mitilai. The chapter ends here, and the next describes the city.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuṇaṅkaḷāl uyarnta vaḷḷal, kōtamaṉ kamalattāḷkaḷ
vaṇaṅkiṉaṉ, valamkoṇṭu ētti, mācu aṟu kaṟpiṉ mikka
aṇaṅkiṉai avaṉkai īntu, āṇṭu aruntavaṉōṭum vāca
maṇam kiḷar cōlai nīṅki, maṇi matil kiṭakkai kaṇṭār.