கம்பராமாயணம் 551 · பால 9.85

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அஞ்சன வண்ணத்தான் தன் அடித் துகள் கதுவா முன்னம்,
வஞ்சி போல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள்;
நெஞ்சினால் பிழை இலாளை , நீ அழைத்திடுக' என்னக்,
கஞ்ச நாள் மலரோன் அன்ன முனிவனும் கருத்துள் கொண்டான்.

பொருள் · Meaning in Tamil

அஞ்சன வண்ணத்தான் தன்- மைபோல் கரியதிரு மேனியுடைய இராமனது; அடித்துகள் - திருவடிப்பொடி; கதுவாமுன்னம் - தன்மேல் படுவதற்கு முன்பே (பட்டதும்); வஞ்சிபோல் இடையாள் - வஞ்சிக்கொடிபோலும் இடையுடைய அகலிகை; முன்னை வண்ணத்தள் - பழைய வடிவத்தை, ஆக நின்றாள் - உடையவளாக எழுந்து நின்றாள்; நெஞ்சினால் பிழைப்பு இலாளை - நெஞ்சாரக் குற்றம் செய்யாத இவளை; நீ அழைத்திடுக என்ன - நீ அழைத்துச் சேர்த்துக் கொள்க என்று விசுவாமித்திரன் கூற; கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும் - தாமரை மலரில் தோன்றிய பிரமனைப் போன்ற கெளதம முனிவனும்; கருத்துள் கொண்டான் - (அச் சொற்களை மனத்திலே ஏற்றுக்கொண்டான்.

நெஞ்சறியக் குற்றம் செய்யாத அகலிகையை ஏற்க வேண்டுமென்று விசுவாமித்திரன் சொல்ல, அதை உணர்ந்த கெளதமனும் ஏற்கலானான். நெஞ்சில் பிழைப்பிலாள்: நெஞ்சினால் சிறிதும் குற்றம் செய்ய எண்ணாதவள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The moment the dust from the feet of him who is dark as collyrium touched her,
  2. she whose waist is like the vañci creeper stood in her former beauty;
  3. she has done no wrong in her heart; take her back,' he said;
  4. and the sage, who was like the god of the great lotus flower, took it to heart.

What the poem says

Vicuvāmittiraṉ tells Kautamaṉ how Akalikai was restored the moment Irāmaṉ's foot-dust touched her. He asks him to take her back, since she never sinned in her heart. Kautamaṉ, as wise as Brahmā on his lotus, accepts.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'añcaṉa vaṇṇattāṉtaṉ aṭit tukaḷ katuvāmuṉṉam,
vañcipōl iṭaiyāḷ muṉṉai vaṇṇattaḷ ākiniṉṟāḷ;
neñciṉāl piḻaippu ilāḷai, nī aḻaittiṭuka' eṉṉak,
kañca mā malarōṉ aṉṉa muṉivaṉum karuttuḷ koṇṭāṉ.