கம்பராமாயணம் 559 · பால 10.7

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தாறு மாய்- (களிப்பு மிகுதியால்) அங்குசத்தை முறிக்கின்ற; தறுகண் குன்றம் - அஞ்சாமையுள்ள மலைபோன்ற யானைகள்; தடமத அருவி - மிக்க மத நீர்ப் பெருக்கை; தாழ்ப்ப- சொரிய விடுவதால்; ஆறும் ஆய் - (கரிய) ஒரு நதி தோன்றி; கலினம் மா விலாழியால் - கடிவாளம் பூண்ட குதிரைகளின் வெண்மையான வாய் நுரையால்; அழிந்து - அக் கரிய நிறம் மாறி; ஓர் ஆறு ஆம்- வேறொரு வெண்ணிற நதியாகி, தேர்கள் ஓட - இரதங்கள் இடைவிடாமல் ஓடித் திரிவதால்; சேறும் ஆம் - (நீர் சிறிது உலர்ந்து) சேறாகியும்; துகளும் ஆம் - (மீண்டும் தேர்கள் ஓடுவதனால்) புழுதியாகவும்; துகளும் ஆய் -(மீண்டும் தேர்கள் ஓடுவதனால்) புழுதியாகவும் ஆகி, ஒன்றோடு ஒன்று- (இவ்வாறு அடிக்கடி) ஒன்றோடு ஒன்று; மாறு மாறாகி - பெரிதும் மாறுபடும் தன்மையுடையதாய்; வாளா கிடக்கிலா - (சிறிது பொழுதும்) ஒரே தன்மையுடையதாக இல்லாத; மறுகில் சென்றார் - பெருவீதியிலே (மூவரும்) போனார்கள்.

கரிய ஆறும் வெள்ளாறும்: யானையின் மதநீரால் ஒரு கரிய ஆறு தோன்றியது; பின்னாக குதிரையின் வாய்நுரை அதில் கலந்தமையால் அக்கருநிறம் சிறிது மாறி வெண்ணிற நதியாயிற்று. மறுகு - தெரு: தேர்கள் இடை உலர்ந்த அந்த இடம் புழுதியாக மாறிற்று. இவ்வாறு மீண்டும் யானை முதலியன செல்லுவதால் மாறி மாறிக் கருநிற நதியும், வெண்ணிற நதியும் உண்டாகும் வீதி எனலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the fearless mountain-like tuskers that break the goad let fall great streams of must,
  2. it became a river; spoilt by the foam of bridled horses, it became another river;
  3. as chariots ran, it became mud, and then dust; one turning into another,
  4. ever changing, never lying still — along such a street they went.

What the poem says

A busy royal street that never stays the same for a moment. War elephants, so wild they snap the goad, pour out so much dark must that the street becomes a black river. The white foam from the mouths of bridled horses turns it into a white one. The wheels of passing chariots churn it to mud, and as it dries they grind it to dust. Then the elephants come by again and the cycle starts over. The verse shows the endless traffic and strength of Mitilai's army.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāṟu māy taṟukaṇ kuṉṟam taṭa mata aruvi tāḻppa,
āṟum āyk, kaliṉa mā vilāḻiyāl aḻintu ōr āṟu āyc,
cēṟum āyt, tērkaḷ ōṭat tukaḷum āy, oṉṟōṭu oṉṟu
māṟu māṟu āki, vāḷā kiṭakkilā maṟukil ceṉṟār.