கம்பராமாயணம் 560 · பால 10.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தண்டுதல் இன்றி - நீங்காமல்; தலைத் தலை ஒன்றி - (கணவன் மனைவி என்கிற) இரண்டு இடங்களிலும் ஒரு தன்மையதாய்; சிறந்த காதல் - மிகுதியான ஆசையின் பயனான காம இன்பத்தை; உண்டபின் - (ஆடவரும் மகளிரும்) ஒருசேர அனுபவித்த பின்பு; கலவிப் போரின் - அந்தப் புணர்ச்சியாகிய போரிலே; ஒசிந்த - சோர்ந்து கிடந்த; மென் மகளிரே போல் - மென்மையான பெண்களைப் போல; பண்தரு கிளவியார்தம் - இசைப் பண்ணைப் போன்ற சொற்களைப் பேசும் பெண்களின்; புலவியில் - ஊடல்களிலே; பரிந்த கோதை - (அவர்களால்) கழற்றி வீசப்பட்ட மாலைகள்; வண்டொடு கிடந்து- (தம்மேல் மொய்த்த) வண்டுகளுடன் கீழே விழுந்து கிடந்து; தேன் சோர்- தேன் வழிவதற்கு இடமான; மணி நெடுந்தெருவில்- அழகிய பெருவீதிகளில்; சென்றார் - போனார்கள்.
மாதரும் பூமாலைகளும்: புணர்ச்சிக்குப்பின் மெலிந்து உறங்குகிற பெண்களைப்போல் அம்மகளிரால் ஊடலால் வீசியெறியப்பட்ட பூமாலைகள் வாடிக் கிடக்கின்றன. மிதிலைத்தெரு: மிதிலையின் தெருக்கள் பலவகைப் பட்டன என்பதைத் தெரிவிக்க மூன்று பாடல்கள் அமைந்துள்ளன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like soft women who, after drinking deep of a love that never falters, shared alike
- on both sides and rising ever higher, lie limp from the battle of love,
- the garlands torn off in the sulks of women whose speech is like music
- lay there with their bees, dripping honey, along the long, beautiful street where they went.
What the poem says
This is the third of three verses on the streets of Mitilai. Women whose voices are like music have torn off their flower garlands during lovers' quarrels and thrown them in the street. The garlands lie wilted and dripping honey, with bees still clinging to them, like women lying spent after a night of love.