கம்பராமாயணம் 561 · பால 10.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நெய்திரள் நரம்பின் - தேன் ஒழுக்குப் போலத் திரண்ட யாழின் நரம்பால் எழும் இசை போல; தந்த மழலையின் இயன்ற - (கேட்பதற்கு இனிமையாகப்) பாடப்பட்ட மழலைச்சொற்களால் அமைந்த; பாடல் - வாய்ப்பாட்டு இசையும்; தைவரும் மகர வீணை - (கைவிரலால்) தடவி வாசிக்கப்படுகிற மகர வீணையின் இசையும், தண்ணுமை - மத்தளத்தின் ஓசையும்; தழுவித் தூங்க - மாறுபடாமல் ஒன்றோடு ஒன்று ஒத்து ஒலிக்கவும்; கைவழி நயனம் செல்ல - (பலவகையாகக் குறிப்புக் காட்டுகின்ற தம்முடைய) கைகள் செல்லும் வழியே தம் கண்களின் குறிப்புப் பார்வை செல்லவும்; கண் வழி மனமும் செல்ல - அக்கண்களின் பார்வை செல்லும் வழியிலே மனத்தின் குறிப்புச் செல்லவும்; ஐயம் நுண் இடையார் - உள்ளதா இல்லையா என்று கண்டவர் சந்தேகப்படும்படியான சின்ன இடையை உடைய மகளிர்; ஆடும் - நாட்டியம் ஆடுகின்ற; ஆடக அரங்கு - பொன்மயமான நடன சாலைகளை; கண்டார் - பார்த்தார்கள்.
நடனத்தில் செய்யும் முறை நான்கு: கண்கள், கை, மனம், உடல் என நான்கின் தொழில்களாலும் நடனமுறை நிகழும். கைவழி நயனம் செல்ல: கையில் தொழில். கண்வழி மனமும் செல்ல: கருத்தில் தொழில். மழலையின் இயன்ற பாடல்: மிடற்றின் தொழில். ஆடும்: உடலின் தொழில். யாழின் நரம்புக்கு உவமை: தேன் ஒழுக்கு. நெய்: இங்கே "தேன்" என்னும் பொருள் தருகிறது. யாழ்வகை நான்கு: 1. பேரியாழ்; 2. மகர யாழ்; 3. சகோட யாழ்; 4. செங்கோட்டி யாழ்; மகரயாழ்: 19 நரம்புகளைக் கொண்டது. நரம்பு, வீணை, தண்ணுமை (ஒலிகள்) - கருவியாகு பெயர்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The song, made of sweet lisping words like music drawn from strings smooth as flowing honey,
- the stroked makara vīṇā and the drum blending and keeping time together,
- the eyes following where the hands went, the heart following where the eyes went —
- they saw golden halls where women with waists so fine one doubted they were there were dancing.
What the poem says
The travellers pass golden dance halls. Song, the makara vīṇā (a nineteen-stringed harp) and the drum keep perfect time together. The dancers have waists so slender one can hardly believe they exist.
The line about eyes following the hands and the heart following the eyes is a classic description of dance. The hand makes the gesture, the eyes follow it, and the inner feeling follows the eyes. The commentary lists the four elements of dance: eyes, hands, mind and body, together with the voice in song.