கம்பராமாயணம் 562 · பால 10.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மாசு உறு பிறவிபோல் - குற்ற நிறைந்த பிறவி போல; வருவது போவது ஆக - (மாறி மாறி) வருவதும் போவதுமாகிய, காசு அறு - குற்றம் அற்ற; பவளச் செங்காய் - பவளம் போலச் சிவந்த காய்களையுடைய மரகதக் கமுகு - மரகதம் போலப் பச்சை நிறப் பாக்கு மரங்களிலே; பூண்ட - பிணைக்கப்பட்டுள்ள; ஊசலின் மகளிர் - ஊஞ்சல்களிலே பெண்கள் ஆட; பூசலின் எழுந்த வண்டு - ஆரவாரத்தோடு மேலே எழுந்த வண்டுகள்; மருங்கினுக்கு - அவர்களின் இடையின் மென்மைக்காக; இரங்கிப் பொங்க - இரக்கப்பட்டு ஒலிக்க; மைந்தர் சிந்தையோடு - ஆண்களின் மனத்தோடு; உலவக் கண்டார் - ஆடுவதைப் பார்த்தார்கள்.
தற்குறிப்பேற்றவணி: மகளிர் ஊஞ்சலில் அமர்ந்து வேகமாக ஆடும் பொழுது, அந்த அதிர்ச்சியால் அவர்களின் உடம்பிலுள்ள பூமாலைகளில் மொய்த்திருந்த வண்டுகள் மேலே எழுந்து பேரொலி செய்கின்றன. அவ் வண்டுகள் இப்பெண்களின் மெல்லிய இடை இவ்வேகத்தைப் பொறுக்காது என்று இரக்கமுற்று வாய்விட்டு அழுவது போலவும் எனக் காட்டினார் - பிறப்புக்கு ஊஞ்சலாட்டம் ஒப்புமையாகிறது. கமுக மரங்களில் கயிறுகளைப் பிணைத்து ஊஞ்சலாடுவது இன்றும் வழக்கமாக உள்ளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the bees, rising with a clamour, hummed loudly in pity for their slender waists,
- coming and going like a birth soiled with sin,
- on swings hung from emerald areca palms that bore flawless coral-red nuts,
- they saw the women swinging, and the hearts of the men swinging with them.
What the poem says
Young women swing on swings tied between areca palms, whose green trunks are like emerald and whose red nuts are like coral. Each swoop shakes the bees out of their garlands, and the bees buzz loudly, as if crying out in pity that such slender waists could not stand the motion. The swing goes back and forth like a soul caught in the cycle of birth and death, and the hearts of the watching men swing with it. The commentary notes that swings were still hung from areca palms in its own day.