கம்பராமாயணம் 563 · பால 10.11

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வரம்பு அறு மணியும் - அளவில்லாத இரத்தினங்களையும்; பொன்னும் ஆரமும் - பொன்னையும் முத்துக்களையும்; கவரி வாலும்- கவரிமானின் வாலையும்; சுரத்திடை அகிலும் - காடுகளில் கிடைக்கின்ற அகில் கட்டைகளையும்; மஞ்ஞைத் தோகையும் - மயிற் பீலிகளையும்; தும்பிக் கொம்பும்- யானைத் தந்தங்களையும் கொண்டு; குரம்பு அணை - வயல்களுக்கு வரப்புகளாகிய கரைகளை; நிரப்பும் மள்ளர் - உழவர்கள் கட்டி முடிக்குமாறு; குவிப்புற - (குட்டுக் குட்டாகக்) குவித்து வைக்கும்; கரைகள் தோறும் பரப்பிய - கரைகள் எங்கும் பரவச் செய்கின்ற; பொன்னி அன்ன - காவிரி நதியைப் போன்ற; ஆவணம் பலவும் - கடைவீதிகள் பலவற்றையும், கண்டார் - பார்த்தார்கள்.

கடைவீதி - காவிரி - கடைவீதியின் இரு பக்கங்களிலும் மணி முதலிய பண்டங்கள் பரவிக் கிடப்பது காவிரியின் இருகரைகளிலும் மலைபடு திரவியங்கள் குவிந்து கிடப்பனபோல் உள்ளன. 'யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவின்' - மதுரைக்: 359. வரப்பு... குரப்பு என்பன வலித்தல் விகாரம்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Gems beyond measure, gold and pearls, yak-tail plumes,
  2. aloe wood from the wild tracts, peacock feathers and elephant tusks,
  3. heaped so high that field-hands could build their dykes and banks with them — like the Poṉṉi, which spreads such things
  4. along every bank of hers, were the many bazaars they saw.

What the poem says

The market streets of Mitilai are lined on both sides with gems, gold, pearls, yak-tail whisks, aloe wood, peacock feathers and ivory. Kampaṉ again compares the scene to his own Kāviri (Poṉṉi), which carries the riches of the hills down to its banks in such quantities that farmers could build field-dykes out of them. The commentary cites the Sangam poem Maturaikkāñci, which describes a broad street "like a river lying at rest."

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1varampu aṟu maṇiyum poṉṉum āramum kavari vālum
curattiṭai akilum maññait tōkaiyum tumpik kompum,
kurampu aṇai nirappum maḷḷar kuvippuṟa, karaikaḷtōṟum
parappiya poṉṉi aṉṉa āvaṇam palavum kaṇṭār.