கம்பராமாயணம் 5622 · சுந்தர 9.24

Section சுந்தர காண்டம் / 9. சம்புமாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இருந்தனன் எழுந்தனன் இழிந்தனன் உயர்ந்தான் - தோரணத்தில் மீது அமர்ந்திருந்த அனுமன், எழுந்து, கீழ் இறங்கி, நிமிர்ந்தவனாகி; என நனி தெரியார் - என்று நன்றாகத் தெரிந்து கொள்ளாதவராய்; விரிந்தவர் - பரவி நின்றவர்களும்; குவிந்தவர் - ஒருங்கு சேர்ந்திருந்தவர்களும்; விலங்கினர் கலந்தார் - விலகிச் சென்றவர்களும், ஒன்று படக் கலந்து கொண்டவர்களும்; பொருந்தினர் நெருங்கினர் - போர்க்களத்தில் பொருந்தியிருந்தவர்களும், நெருங்கி நின்றவர்களும்; களம்படப் புடைத்தான் - போர்க்களத்தில் அழிந்து போக, அந்த எழுவால் ஒரு சேர அடித்துக் கொன்றான்.

அனுமன் எப்படிச் செயல்படுகிறான் என்பதைக்கூட அரக்கரால் அறிய முடியவில்லை; அவ்வளவு வேகமாக அவன் செயல்பட்டான். என்ன நடக்கிறது என்பதை அரக்கர் சேனை அறியுமுன்னே அனுமன் அவர்களை அழித்தான். இருந்தவன் (அனுமன்) எழுந்து, இழிந்து, உயர்ந்து, திரிந்து போர் செய்தான்; அவன் செயலை அறியாத அரக்க வீரர்களை எழுவால் அடித்துக் கொன்றான். இருந்தனன். வினையாலணையும் பெயர் எழுந்தனன் இழிந்தனன் உயர்ந்தான் திரிந்தனன் - முற்றெச்சங்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Whether he sat or rose, came down or reared up tall,
  2. wheeled about or turned, they could not clearly tell;
  3. those spread out and those massed, those who drew aside and those who mingled,
  4. those close by and those pressing in — he struck them down until the field was strewn with them.

What the poem says

Aṉumaṉ moves so fast that the rākṣasas cannot follow what he is doing: one moment seated on the gateway, then up, then down on the ground, then towering, wheeling and turning.

Before they understand what is happening, he has swept his iron bar through every part of their army — the scattered, the massed, those who stepped back and those who closed in — and laid them all dead on the field.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iruntaṉaṉ eḻuntaṉaṉ iḻintaṉaṉ uyarntāṉ
tirintaṉaṉ purintaṉaṉ eṉa naṉi teriyār;
virintavar kuvintavar vilaṅkiṉar kalantār
poruntiṉar neruṅkiṉar kaḷam paṭap puṭaittāṉ.