கம்பராமாயணம் 5624 · சுந்தர 9.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இருங்கவுள் யானை - (அனுமனால் அடிக்கப்பட்ட) மதம் பெருகும் கன்னத்தை உடைய யானைகள்; நெடுங் கொடி இழந்தன - (தம் மேல் பிடிக்கப்பட்ட) பெரிய கொடிகளை இழந்தன; இருங்கோடு இழந்தன - பெரிய தந்தங்களை இழந்தன; நெடும் கரம் இழந்தன - பெரிய துதிக்கைகளை இழந்தன; வியன்தாள் இழந்தன - பெரிய கால்களை இழந்தன; முழங்கு ஒலி இழந்தன - வீறிடுகின்ற ஒலியை இழந்தன; மதம் பாடு இழந்தன - மதம் ஒழுகுதலை இழந்தன; பெருங் கதம் இழந்தன - பெரிய கோபத்தை இழந்தன. அனுமனால் யானைப்படைகள் அழிந்தமை கூறப்பட்டது. யானையின் மீது கொடி எடுத்தல் மரபு. கோபத்தைக் காட்ட முடியாதபடி யானைகள் இறந்தன என்பதை பெருங்கதம் இழந்தன என்று குறித்தார். உயிர் இருந்தால்தானே உணர்ச்சியைக் காட்ட முடியும் ?
ஆங்கிலம் · English translationAI
Translation
- They lost their tall banners, lost their great tusks,
- lost their long trunks, lost their broad legs,
- lost their trumpeting roar, lost their flow of must,
- lost their great fury — the elephants with their great cheeks.
What the poem says
Three verses now describe the destruction of three divisions of Campumāli's army. First the elephants, in a verse built on 'they lost': the banners carried on their backs, their tusks, trunks and legs, their trumpeting, the must that flows from their temples, and finally their rage.
Losing their anger means they are dead — only the living can show fury.