கம்பராமாயணம் 5632 · சுந்தர 9.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வென்றி வெம்புரவியின் வெரிநினும் - வெற்றியைத் தரத்தக்க வலிய குதிரைகளின் முதுகிலும்; விரவார் மன்றல் அம் தார் அணி மார்பினும் - பகைவர்களான அரக்க வீரர்களது நறுமணம் உள்ள மாலைகள் அணிந்த மார்புகளிடத்தும்; மணித்தேர் ஒன்றின் நின்று ஒன்றினும் - மணிகள் கட்டப்பெற்ற தேர்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றிலும்; உயர் மத மழை தாழ் குன்றினும் - உயர்ந்தோங்கிய மதமாகிய மழை பொழிகின்ற மலை போன்ற யானைகளிடத்திலும்; கடை யுகத்து - யுக முடிவின் காலத்தில்; உரும் எனக் குதித்தான் - தோன்றும் இடியே போல, (அனுமன்) குதித்து அழித்தான்.
முன் கவியில், சொல்லப்பட்டது, இங்கு விரித்துரைக்கப்படுகின்றது. மதமழைதாழ் குன்று - என்ற குறிப்பால் யானை என்பது உணர்த்தப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On the backs of fierce, victorious horses, on the breasts of his foes
- adorned with fragrant, lovely garlands, from one jewelled chariot
- to the next, and onto hills down which the rain of must pours,
- he leapt like the thunderbolt at the end of the age.
What the poem says
Expanding the previous verse, the poet shows Aṉumaṉ bounding from target to target: onto the backs of horses, onto the garlanded chests of warriors, from chariot to chariot, and onto elephants — 'hills streaming with the rain of must'.
Each landing is as destructive as the thunderbolt that falls at the end of the world.