கம்பராமாயணம் 5631 · சுந்தர 9.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புகை நெடும் பொறி புகும் திசை தொறும் பொலிந்தான் - புகையோடு கூடிய நீண்ட நெருப்புப் பொறி (சினத்து) செல்லும் இடங்களில் எல்லாம் சென்று விளங்குபவனாகிய அனுமன்; சிகை நெடும் சுடர் விடும் தேர்தொறும் சென்றான் - சிகரங்களினின்று நீண்ட ஒளி விடும் தேர்கள் இருக்குமிடம் எல்லாம் சென்றான்; தகை நெடும் கரிதொறும் பரிதொறும், சரித்தான் - சிறப்பமைந்த பெரிய யானைகள் குதிரைகள் இருக்கும் இடங்களில் எல்லாம் சஞ்சரித்தான்; நகை நெடும் படை தொறும் - (தன்னைப் பார்த்து அற்பக்குரங்கு என்று) ஏளனம் செய்து சிரித்த போர்ப் படைகள் தோறும்; தலை தொறும் நடந்தான் - அப்படையில் உள்ள வீரர்கள் தலை தோறும் நடந்து சென்று அவர்களை அழித்தான்.
பொலிந்தான்; வினையாலணையும் பெயர் (பொலிந்தவன்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Wherever the long smoky sparks flew, there he went;
- to every chariot whose tall crests sent out flames and golden garlands gleamed;
- he roamed among every great elephant and every horse;
- and over every jeering army, over every head, he strode.
What the poem says
Aṉumaṉ goes everywhere on the battlefield: wherever sparks and smoke fly, to every chariot with its blazing crest, among every elephant and horse.
Over the troops who had laughed at him as a mere monkey he literally walks, treading on their heads as he kills them.