கம்பராமாயணம் 5645 · சுந்தர 9.47

Section சுந்தர காண்டம் / 9. சம்புமாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐயன் சலித்தான் - அனுமன் (தன் கையிலிருந்த எழு அறுத்து வீழ்த்தப்பட்டதனால்) சிறிது சலிப்படைந்து; கையால் எய்யும் சரத்தை உகச் சாடி - (உடனே) சம்புமாலி தன்மீது எய்கின்ற அம்புகளை எல்லாம் தன் கைகளாலேயே உதிர்ந்து போம்படி மோதித்தள்ளி; ஒலித்தார் அமரர் கண்டார் ஆர்ப்ப - தழைத்தலை உடைய மாலையை அணிந்த தேவர்கள் கண்டு ஆரவாரம் செய்ய; தேரினுள் புக்கு - சம்புமாலியின் தேரினுள்ளே பாய்ந்து புகுந்து; கலித்தான் சிலையை - வீரவொலி செய்து கொண்டிருந்த அவனது வில்லை; கையால் வாங்கி பகுவாய் மடித்து - தன் கையால் எளிதில் பற்றி தன் திறந்த வாயை மடித்துக் கொண்டு; மலைபோல் தலை - மலை போன்ற அவன் தலை; மண் இடை வீழ - தரையில் விழுமாறு; கழுத்திடை இட்டு வலித்தான் - அவனது கழுத்திலே மாட்டி இழுத்தான்.

ஒலித்தல் - தழைத்தல்; “ஒலி கொண்டு” - ஒலி - தழைத்தல்; “ஒலி தெங்கு” (பதிற் - 13) போல.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The lord was vexed; he beat down with his hands the arrows being shot at him,
  2. and while the gods in their thick garlands watched and cheered, he leapt into the chariot,
  3. seized in his hand the bow that was twanging, slipped it round the neck
  4. and pulled — and, the gaping mouth snapping shut, the mountain-like head fell to the earth.

What the poem says

Annoyed at losing his iron bar, Aṉumaṉ simply bats the arrows away with his bare hands and leaps into Campumāli's chariot as the gods cheer.

He snatches the bow out of Campumāli's hands, loops it round his neck and pulls until the rākṣasa's huge head is wrenched off and falls to the ground. Campumāli is killed with his own weapon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1calittāṉ aiyaṉ, kaiyāl eyyum carattai ukac cāṭi,
olit tār amarar kaṇṭār ārppa, tēriṉuḷ pukku,
kalittāṉ cilaiyaik kaiyāl vāṅkik kaḻuttiṉiṭai iṭṭu
valittāṉ; pakuvāy maṭittu malaipōl talai maṇṇiṭai vīḻa