கம்பராமாயணம் 5647 · சுந்தர 9.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விரிந்த குருதிப் பேர் ஆறு - பரந்த இரத்தவெள்ளமாகிய பெரிய ஆறு; பிரிந்து புலம்பும் மகளிர் காண - தம் கணவர் இறந்தமையால் இரங்கிப் புலம்பும் பெண்கள் காணுமாறு; கணவர் பிணம் பற்றி ஈர்த்து மனைகள் தொறும் வீச - அவரவர் கணவர்களுடைய பிணங்களைப் பிடித்து இழுத்து வந்து அவரவர் வீடுகள் தோறும் கொண்டு வந்து வீச; இலங்கை இரிந்தது - (அதைக் கண்ட) இலங்கை நகரம் நிலை குலைந்து அலைந்தது; அழுகை எழுந்தது - அழுகைக் குரல் எங்கும் மேலோங்கியது; இன்று இங்கு இவனாலே - இன்றைய தினம், இந்த இலங்கையில் இந்தக் குரங்கினால்; அரக்கர் வலி சரிந்தது என்று எண்ணி - அரக்கர்களுடைய வலிமை அழிந்தது என்று நினைத்து, அறமும் தளிர்த்தது - அறக்கடவுளும் மனம் களித்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the great spreading river of blood seized the corpses of husbands, dragged them along
- and flung them down at every house while their grieving wives looked on,
- Ilaṅkai was thrown into turmoil and wailing rose up; and Dharma too, thinking,
- 'Today, here, through this one, the might of the rākṣasas has toppled,' put forth fresh shoots.
What the poem says
The flood of blood carries the bodies of the dead warriors through the streets and deposits each at the door of his own house, before the eyes of his weeping wife. All Ilaṅkai is in confusion, and the sound of mourning rises everywhere.
But Dharma, righteousness personified, revives like a plant putting out new leaves, seeing that the power of the rākṣasas has begun to fall that day at Aṉumaṉ's hands.