கம்பராமாயணம் 5648 · சுந்தர 9.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அமரர் - செய்தி சொல்லவேண்டிய பருவத தேவர்கள்; பொலம் தார் அரக்கன் பொரு இல் பெருங் கோயில் புக்கார் - பொன்னாலான மாலை அணிந்த அரக்கனான இராவணனுடைய ஒப்பற்ற பெரிய அரண்மனையில் புகுந்து; விளம் பல் ஆற்றார் - செய்தி சொல்வதற்கு வாயெழாமல், விக்காநின்றார் - விக்கி விக்கி நின்று; வெருவி விம்முவார் - அஞ்சி நடுங்குவாரானார்கள்; அரக்கன் - அது கண்ட இராவணன்; நக்கான் - சிரித்து; நடுங்கல் என்றான் - நடுங்காதீர் என்று கூறினான்; ஐய ! - (பின்பு அவர் இராவணனை நோக்கி) ஐயனே !; நமர் எல்லாம் உக்கார் - நம்மவரான அரக்கர் அனைவரும் இறந்தனர்; சம்பு மாலி உலந்தான் - சம்புமாலியும் இறந்து போனான்; ஒன்றே குரங்கு என்றார் - (இவ்வளவுக்கும் அங்கு எதிர்த்துப் போர் புரிவது) ஒரே குரங்குதான் என்று கூறினார்கள்;
உலந்தான் - இறந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They entered the matchless great palace of the demon king with the golden garland;
- they stood there sobbing, unable to speak; they trembled and wept in fear.
- The demon laughed and said, 'Do not shake.' 'Lord! All our people
- have perished; Campumāli is dead; it is a single monkey,' they said.
What the poem says
The few who survived Aṉumaṉ's slaughter of Campumāli's army run back to Irāvaṇaṉ's palace. They are so shaken that they can only sob; the king laughs and tells them not to tremble, and they finally blurt out the news: the whole force and its general are dead, and the enemy is one lone monkey.
The point of the last line is the absurd contrast between the size of the loss and the size of the foe.