கம்பராமாயணம் 5649 · சுந்தர 9.51

Section சுந்தர காண்டம் / 9. சம்புமாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்னும் அளவின் எரிந்து வீங்கி எழுந்த வெகுளியான்,
உன்ன உன்ன உதிரக் குமிழி விழி ஊடு உமிழ்கின்றான்,
"சொன்ன குரங்கை, யானே பிடிப்பன் கடிது தொடர்ந்து", என்றான்.
அன்னது அன்னது உணர்ந்த சேனைத் தலைவர் ஐவர் அறிவித்தார்

பொருள் · Meaning in Tamil

என்னும் அளவின் - என்று அவர்கள் கூறிய அளவில், எரிந்து வீங்கி எழுந்த வெகுளியான் - பற்றி யெரிந்து மிகுதியாகக் கிளம்பின சினத்தை உடைய இராவணன்; உன்ன உன்ன - (அவ்வாறு சம்பு மாலி முதலிய அரக்கர்கள் இறந்த செய்தியை) நினைக்கும் தோறும்; விழியூடு உதிரக் குமிழி உமிழ்கின்றான் - விழிகளின் வழியே இரத்தக்குமிழிகளைக் கக்கிக்கொண்டு; சொன்ன குரங்கை - நீர் சொன்ன அந்தக் குரங்கை; யானே கடிது - நானே விரைந்து சென்று; தொடர்ந்து பிடிப்பேன் என்றான் - பிடித்து வருவேன் என்று கூறினான்; அன்னது உணர்ந்த சேனைத் தலைவர் ஐவர் அறிவித்தார் - அதை உணர்ந்த படைத் தலைவர்களான ஐவர் (இராவணனிடம் பின்வருமாறு) தெரிவிக்கலானார்கள்.

அறிவித்தது அடுத்த படலத்தில் கூறப்படும். சேனைத்தலைவர் ஐவர்:- விரூபாட்சன், யூபாட்சன், துர்த்தரன், பிரகசன், பாசகர்ணன் என வான்மீகம் பெயர் குறிப்பிடுகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At those words his anger blazed up, swelled and rose;
  2. the more he brooded, the more he spat bubbles of blood through his eyes.
  3. 'That monkey you speak of, I myself will chase down swiftly and seize,' he said.
  4. Hearing that, the five commanders of the army made their plea.

What the poem says

Irāvaṇaṉ's laughter turns to fury as the news sinks in. Each time he thinks of the slain warriors his rage grows, until his eyes seem to pour out bubbles of blood, and he declares that he will go and catch the monkey himself.

At this the five generals of his army step forward to speak; their plea opens the next canto. The Sanskrit Rāmāyaṇa names them Virūpākṣa, Yūpākṣa, Durdhara, Praghasa and Bhāsakarṇa.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṉum aḷaviṉ erintu vīṅki eḻunta vekuḷiyāṉ,
uṉṉa uṉṉa utirak kumiḻi viḻiyūṭu umiḻkiṉṟāṉ,
"coṉṉa kuraṅkai, yāṉē piṭippaṉ kaṭitu toṭarntu", eṉṟāṉ.
aṉṉatu uṇarnta cēṉait talaivar aivar aṟivittār