கம்பராமாயணம் 5650 · சுந்தர 10.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
திறலோய் - (சேனைத் தலைவர் இராவணனை நோக்கி) வலிமை வாய்ந்தவனே! (நீ); சிலந்தி உண்பது ஓர் குரங்கின் மேல் சேறியேல் - சிலந்திப் பூச்சியைப் பிடித்துத் தின்னும் ஒரு குரங்கின் மேல் போர் செய்யப் போவாயானால்; திசைப் பூட்கை - எட்டுத் திக்கு யானைகள்; கலந்த போரில் - நீ எதிர்த்துப் புரிந்த போரில்; நின் கண் புலன் - உனது கண்களிலிருந்து; கடும் கனல் கதுவ - கொடிய நெருப்புப் பொறி பறக்க; உலந்த மால் வரை - கோடை வெயிலால் காய்ந்து போன பெரிய மலையில்; அருவி ஆறுஒழுக்கு அற்று ஒக்க - அருவிகள் தம் வழியே செல்லும் ஓட்டம் அற்றுப்போனது போல; புலர்ந்த மாமதம் - (உன்னால் அடிபட்டு வலிமைகுறைந்தமையால்) அற்றுப் போன மிக்க மதநீர்; பூக்கும் அன்றே - மீண்டும் தோன்றப் பெறும் அல்லவா ?
அருவி ஆறு வற்றிப் போன மலைக்கு மதம் அடங்கிய திக்கு யானைகள் உவமை. ஒரு குரங்கை எதிர்த்து இராவணன் போருக்குச் சென்றால், அது அவனது ஆற்றலின் குறைவைத் தெரிவிக்கும். முன் தோற்ற அந்த யானைகள் இப்போது அவனை இழிவாகக் கருதி மகிழ்ச்சியினால், மதச் செருக்குக் கொள்ளும், என்று சேனைத் தலைவர் கூறினார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If you march against a monkey that feeds on spiders, mighty one,
- then the elephants of the quarters, whom in close battle the fierce fire of your eyes once scorched,
- so that, like a great parched mountain whose falls and streams have ceased to flow,
- their rut ran dry, will they not burst into rut again!
What the poem says
The five generals argue that Irāvaṇaṉ must not stoop to fight a mere monkey, a creature that eats spiders. Long ago he defeated the elephants that guard the eight directions; his blazing glare dried up their rut as summer dries the streams on a mountain.
If he now goes out against so petty a foe, they say, those elephants will take it as a sign of his decline, recover their pride and swell with rut once more.