கம்பராமாயணம் 5651 · சுந்தர 10.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இலங்கு வெம்சினத்து - விளங்குகின்ற கொடிய கோபத்தையும்; அம் சிறை - அழகிய சிறகுகளையும்; எறுழ் வலிக் கலுழன் - மிக்க வலிமையையும் உடைய கருடன்; உலங்கின் மேல் உருத்தென்ன - ஒரு கொசுகின் மேல் கோபித்துப் போர் செய்வது போல; நீ குரங்கின் மேல் உருக்கின் - நீ அற்பக் குரங்கின் மீது போர் புரியச் சென்றால்; அலங்கல் மாலை நின் புயம் நினைந்து - அசைந்தாடும் வெற்றி மாலை அணிந்த நினது தோள் வலிமையை நினைந்து; வெள்ளி அம் குன்றம் - கயிலை மலை; அல்லும் நன் பகலும் குலுங்கும் வன் துயர் நீங்கும் - இரவிலும் நல்ல பகலிலும் அச்சத்தால் நடுங்கும் கொடுந்துன்பம் நீங்கப் பெறும்.
உன்னால் முன்பு பெயர்த்தெடுக்கப்பட்டு எளிமைப் பட்ட கயிலை மலை, நீ, இப்போது அற்பமான ஒரு குரங்கினிடம் போருக்குச் சென்றால், உன்னிடத்துக் கொண்டிருந்த அச்சம் நீங்கும் அல்லவா ! அதனால் எங்களைப் போருக்கு அனுப்புக என்றனர் சேனாபதிகள். எறுழ் வலி; ஒரு பொருட் பன் மொழி. உலங்கு - கொசுகு. உரு, உட்குதல், அஞ்சுதல்; உருக்குதல் - எதிராளி அஞ்சும்படி தாக்குதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If, like Garuḍa of shining fierce wrath, lovely wings and overwhelming strength
- rising in fury against a gnat, you rage against a monkey,
- then, thinking of your shoulders hung with swaying garlands, night and fair day
- the silver mountain will be freed from the harsh dread that makes it shake.
What the poem says
The generals continue. For Irāvaṇaṉ to attack a monkey would be like Garuḍa, the mighty eagle, making war on a mosquito.
Irāvaṇaṉ once lifted Kailāsa, the silver mountain, and it has trembled in fear of his arms ever since. If he now fights so small an enemy, the mountain will conclude that his strength has waned and stop being afraid. So, they say, send us instead.