கம்பராமாயணம் 5652 · சுந்தர 10.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உறுவது என்கொலோ - நீ குரங்கை எதிர்த்துப் போர்செய்யப் புகுவதால் உனக்கு வரக்கூடிய நலம் என்ன இருக்கிறது ?; உரன் அழிவு என்பது ஒன்று உடையார் - வலிமை அழிவதென்னும் நிலை உடையவர்கள்; பெறுவது யாது ஒன்றும் காண்கிலர் கேட்கிலர் பெயர்ந்தார் - விளைவு என்ன என்பதைக் காணாதவரையும் அது பற்றி எவரேனும் சொன்னால் கேளாதவரையும் போனவர்களே ஆவர் என்பர்; சிறுமை ஈது ஒப்பது யாது - வீரத்தன்மைக்கு இது போன்ற இழிவு வேறொன்று என்ன இருக்கிறது; நீ குரங்கின்மேல் செல்லின் - நீ ஒரு குரங்கை எதிர்த்துப் போர் செய்யப் போவாயாயின்; நின்ற மூவர்க்கும் - உன்னை எதிர்ப்பதை விடுத்து ஒதுங்கியுள்ள மும்மூர்த்திகளுக்கும்; முகங்கள் முறுவல் பூக்கும் அன்றே - முகத்தில் புன்சிரிப்புத் தோன்றுமன்றோ ?
தகுதியால் இழிந்தோரிடம் போர் செய்யப் புகுவது வீரத்துக்கு இழிவு. ஆகவே, கயிலை மலையையே பெயர்த்தவன் ஒரு குரங்கை எதிர்க்கப் புகுவது கவ் அழிவே என்று பஞ்சசேனாபதியர் குறித்தனர். உரனுக்கு அழிவு தேட முற்பட்டார் தாமும் தெளியார் பிறர் சொல்லும் கேளார் என்ற உலகியல் உண்மையை ர இத்தனையையும் மீறிப் போனால் மும்மூர்த்திகளின் முகத்தில் ஏளனச் சிரிப்புத் தோன்றும் என்பது பஞ்ச சேனாபதியர் கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- What would you gain by it? Those who are bent on the ruin of their own strength
- see nothing of what they will reap and heed no one; so they go their way.
- What disgrace could equal this? If you go out against a monkey,
- will not a smile bloom on the faces of the Three who stand aside!
What the poem says
The generals press the argument. Nothing can be gained by fighting a monkey; people who court the loss of their own prestige neither see the outcome themselves nor listen to those who warn them.
Worse, the three great gods, Brahmā, Viṣṇu and Śiva, who keep out of Irāvaṇaṉ's way, would smile in mockery to see the conqueror who lifted Kailāsa go to war with a monkey.