கம்பராமாயணம் 5653 · சுந்தர 10.4

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரச ! - அரசனே !; அன்றியும் - இவை அல்லாமலும்; உனக்கு ஆள் இன்மை தோன்றும் - உனக்கு ஏவற்பணி செய்யும் வீரர்கள் இல்லாமை விளங்கும்; வென்றி இல்லவர் மெல்லியோர் தமைச் செலவிட்டாய் - (முன்பெல்லாம்) வெற்றி பெறத் தகாதவர்களையும், வலிமையிற் குறைந்தவர்களையும் (அனுமன் மேல் போருக்குக் செல்லும்படி ஏவினாய்; இன்று ஒன்று நன்றி காண்டியேல் - இன்று ஒரு நற்செயலை நீ காணவிரும்புவாயானால்; எமைச் செல நயத்தி என்று - எங்களைப் போருக்குச் செலுத்த விரும்புவாய் என்று சொல்லி; கை தொழுது இறைஞ்சினர் - (சேனாபதிகள்) கைகளால் கும்பிட்டு வணங்கினர்; அரக்கனும் இசைந்தான் - இராவணனும் அதற்கு உடன்பட்டான்.

தமக்கு முன் அனுமனோடு போர் செய்யச் சென்றோர் வலிமை குறைந்தவர்கள் என்றும் தாங்களே அனுமனை எதிர்த்த பொழுது வெல்ல வல்லவர்கள் என்றும் பஞ்சசேனாபதிகள் கூறுகின்றனர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Besides, it would make it seem you have no men, O king!
  2. You sent out weak ones who had no victory in them.
  3. If today you wish to see something good done, be pleased to send us,'
  4. they said, and bowed with joined hands in worship; and the demon king agreed.

What the poem says

The generals add a further argument: if the king himself goes, it will look as though he has no warriors left. Those he sent before were feeble and unfit to win.

If he wants to see a fine deed today, he should send them. They fold their hands and bow, and Irāvaṇaṉ consents.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṟiyum uṉakku āḷ iṉmai tōṉṟumāl'araca!
veṉṟi illavar melliyōr tamaic cela viṭṭāy
naṉṟu nī iṉṟu kāṇṭiyēl emaic cela nayatti
eṉṟu kaitoḻutu iṟaiñciṉar; arakkaṉum icaintāṉ.