கம்பராமாயணம் 5654 · சுந்தர 10.5

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உலகம் மூன்றிற்கும் முதன்மை பெற்றோர் என உயர்ந்தார்
திலகம் மண் உற வணங்கினர்; கோயிலில் தீர்ந்தார்;
அலகில் தேர் பரி கரியொடு ஆள் மிடைந்த போர் அரக்கர்
'தொலைவு இலாதது கதும் என வருக'எனச் சொன்னார்.

பொருள் · Meaning in Tamil

மூன்று உலகிற்கும் முதன்மை பெற்றோர் என உயர்ந்தார் - மூன்று உலகங்களுக்கும் தலைமை பெற்றவர் போன்று உயர்ந்தவரான பஞ்ச சேனாபதிகள்; திலகம் மண் உற வணங்கினர் - தமது நெற்றித்திலகம் தரையில் படும்படி இராவணனை நோக்கிக் கீழே விழுந்து வணங்கினார்கள்; கோயிலின் தீர்ந்தார் - (பிறகு) அரண்மனையை விட்டு வெளி வந்து; தொலைவு இலாதன - எளிதில் அழிவில்லாதனவாகிய; அலகு இல் தேர், பரி கரியொடு - அளவற்ற தேர்களும் குதிரைகளும், யானைகளும் (என்ற இச் சேனையோடு); மிடைந்த போர் அரக்கர் - நெருக்கமாக உள்ள போர் செய்யவல்ல அரக்கவீரர்கள்; கதும் என வருக எனச் சொன்னார் - விரைவாக வரக்கடவர் என்று கட்டளையிட்டார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They, exalted as though they held lordship over all three worlds,
  2. bowed till the marks on their brows touched the ground, and left the palace;
  3. 'Let the war-demons come at once, packed with countless chariots, horses and elephants
  4. and foot soldiers, a host that cannot be destroyed,' they commanded.

What the poem says

The five generals, swelling with pride as if they ruled the three worlds, prostrate themselves before Irāvaṇaṉ so low that the sacred marks on their foreheads touch the earth.

They leave the palace and immediately order a vast army of chariots, horses, elephants and infantry to assemble.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ulakam mūṉṟiṟkum mutaṉmai peṟṟōr eṉa uyarntār
tilakam maṇ uṟa vaṇaṅkiṉar; kōyilil tīrntār;
alaku il tēr pari kariyoṭu āḷ miṭainta pōr arakkar
'tolaivu ilātaṉa katumeṉa varuka'eṉac coṉṉār.