கம்பராமாயணம் 565 · பால 10.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குலால் மகன் - குயவனால்; முடுக்கிவிட்ட - வேகமாகச் சுழற்றிவிடப்பட்ட; மண்கலத் திகிரிபோல - மண்கலம் செய்யும் கருவியான சக்கரம் போல; வாளியின் வருவ- வட்டகதியாய் ஓடி வரக் கூடியனவும்; மேலோர் நட்பினின் - பெரியவர்கள் (தமக்குள் பூணும்) நட்பும் (இடையில் நீங்காமல் தொடர்வது) போல; இடை அறாவாம் - இடையில் விட்டு நீங்காதனவும்; ஞானிகள் உணர்வின் - தத்துவ ஞானிகளின் அறிவு (பல பொருள்களிடத்தும் செல்லாது ஒரு பொருளிலே செல்வது) போல ஒரு தன்மையுடையனவுமாகி, கண் புலத்து - கண்ணின் பார்வைக்கு; இனைய என்று - இத்தன்மையன என்று; தெரிவு இல- அறிய முடியாதனவான; கொட்பு உறு - சுழன்று ஓடுகின்ற; கலினப் பாய்மா - கடிவாளம் பூண்டு பாய்ந்து செல்லும் இயல்புள்ள குதிரைகள்; திரியக் கண்டார் - எங்கும் திரிவதைப் பார்த்தார்கள்.
குதிரைகள் இயல்பு: இடையில் நிற்காமலும், வழியைவிட்டு விலகாமலும் குதிரைகள் ஓடும் இயல்புடையன. 'கூட்டுகிற முடுக்கிவிட்ட குயமகன் திகிரிபோல வாள்திறல் தேவதத்தன் கலினமா திரியுமன்றே' - சிந்தா:786. ஞானிகள் - குதிரைகள். ஞானிகளின் அறிவு ஒன்றாயிருந்தும் சிறிது நேரத்திலே பல பொருளிடத்தும் செல்லுதல்போலக் குதிரை ஒன்றாயிருந்தும் சிறிது நேரத்திலே பல இடத்தும் செல்லும் தன்மையது. மேலோர் நட்பு இடையறாமை: 'நிறை நீர நீரவர் கேண்மை பிறைமதி' -குறள்782. 'பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையா நந்தும்' - நாலடியார் 125
ஆங்கிலம் · English translationAI
Translation
- Whirling, bridled, leaping horses, like the potter's wheel for clay pots
- that the potter's son spins hard, came round in circles; like the friendship of the noble,
- they never broke off; like the awareness of sages, they were one;
- and the eye could not tell what they were like — so they saw them roam.
What the poem says
Horses are being exercised in the city, galloping in tight circles so fast that the eye cannot follow them. Kampaṉ gives three comparisons. They spin like a potter's wheel. They never break off, like the friendship of noble people, which the Tirukkuṟaḷ and Nālaṭiyār say grows like the waxing moon and never wanes. And they are single like a sage's awareness, which stays one yet reaches many things in a moment, as a single horse is everywhere at once. The commentary quotes a similar image from the Jain epic Cīvaka Cintāmaṇi.