கம்பராமாயணம் 566 · பால 10.14

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வாளரம் - அரம் என்னும் வாள் வகையால்; பொருத வேலும் - அராவிய வேலும்; மன்மதன் சிலையும் - காமதேவனது வில்லும்; வண்டின் கேளொடு - வண்டுகளின் இனத்தோடு; கிடந்த நீலச் சுருளும் - பொருந்திய நீல மணிச்சுருளும்; செங்கிடையும்- சிவந்த நெட்டி என்னும் சடையையும்; கொண்டு - (தன்னிடத்தே) கொண்டு; நீள் இருங் களங்கம் - நீண்ட காலம் தம்மிடம் தங்கியிருந்த பெரிய களங்கத்தை; நீக்கி - போக்கி; நிரைமணி மாடம் - இரத்தினங்கள் பதித்த வரிசையாக உள்ள மாட மாளிகைகளின்; நெற்றிச் சாளரம் தோறும் - மேலிடத்தில் உள்ள பலகணி வாயில்கள் தோறும்; தோன்றும் - காணப்படுகின்ற; சந்திர உதயம் - முழுச் சந்திரர்களின் உதயத்தை, கண்டார் - பார்த்தார்கள்.

சாளரப் பெண்கள்: வீதியில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் காண்பதற்காக உப்பரிகையின்மேல் சாளரங்கள்தோறும் பெண்கள் நிற்கின்றார்கள்; அவர்களின் முகத்தோற்றத்தைக் கண்ட காட்சியே இங்குச் சித்தரிக்கப் பெற்றுள்ளது. அணி: உருவக உயர்வு நவிற்சியணி: மதியும் பெண்களின் முகமதியும்: வான்மதி; வானத்தில் காணக்கூடிய மதி ஒன்று; பகலில் ஒளி மழுங்கக்கூடியது; களங்கம் உள்ளது. பெண்மதிகள்: பகலில் ஒளி மழுங்காது; களங்க மற்ற நிலை; பல சந்திரர்கள் (முகங்கள்) உதயமாதல். உவமை: வேல் - கண்களுக்கு; சிலை - புருவத்துக்கு; வண்டோடு கிடந்த நீலச்சுருள் - கூந்தலுக்கு; செங்கிடை (அதரம்) - உதட்டுக்கு; சந்திரன் - பெண்களின் முகங்களுக்கு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bearing spears ground sharp on the file, the bow of Kāma,
  2. dark-blue curls lying among their kin the bees, and red pith,
  3. rid of their long, dark stain, at every window high on the brow of the jewelled mansions
  4. they appeared — and the travellers saw the rising of moons.

What the poem says

Women lean out of every upper window of the mansions to watch the street, and Kampaṉ calls their faces moons rising at every window. These moons are better than the one in the sky. There are many of them, they do not fade by day, and they have no dark spot. Each "moon" carries features of its own: sharpened spears for eyes, Kāma's bow for brows, dark curls swarming with bees for hair, and red pith (ceṅkiṭai) for lips.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāḷaram poruta vēlum, maṉmataṉ cilaiyum, vaṇṭiṉ
kēḷoṭu kiṭanta nīlac curuḷum, ceṅ kiṭaiyum koṇṭu,
nīḷ iruṅ kaḷaṅkam nīkki, nirai maṇi māṭa neṟṟic
cāḷaramtōṟum tōṉṟum, cantira utayam kaṇṭār.