கம்பராமாயணம் 567 · பால 10.15

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பளிக்கு வள்ளத்து வார்த்த பசு நறுந் தேறல் மாந்தி,
வெளிப்படு நகைய ஆகி, வெறியன மிழற்றுகின்ற,
ஒளிப்பினும் ஒளிக்க ஒட்டா ஊடலை உணர்த்து மா போல்
களிப்பினை உணர்த்தும் செவ்விக் கமலங்கள் பலவும் கண்டார்.

பொருள் · Meaning in Tamil

பளிங்கு வள்ளத்து - பளிங்குக் கிண்ணத்திலே; வாக்கும் - ஊற்றப்படும்; பசு நறுந்தேறல் - புதிய மணமுள்ள தெளிந்த மதுவை; மாந்தி - குடித்து; வெளிப்படு நகைய ஆகி - அதனால் வெளிப்படுகின்ற சிரிப்பை உடையனவாயும்; வெறியன மிழற்றுகின்ற - வெறியுணர்ச்சிகொண்ட வார்த்தைகளைப் பிதற்றுகின்ற; ஒளிப்பினும் - மறைத்துவைக்க முயன்றாலும்; ஒளிக்க ஒட்டா - மறைக்க முடியாத; ஊடலை உணர்த்துமாபோல் - ஊடலைப்புலப்படுத்தும் வகைபோல; களிப்பினை உணர்த்தும் - மதுக் களிப்பை வெளிப்படுத்துகின்ற; செவ்விக் கமலங்கள் - அழகிய செந்தாமரைப் பூக்கள்; பலவும் கண்டார்- பலவற்றையும் கண்டார்கள்.

அணி: உருவக உயர்வு நவிற்சியணி. மகளிர் முகங்கள் இங்குக் கமலங்கள் என்று உருவகிக்கப்பெற்றுள்ளன. கள் குடித்தவர் இயல்பு: காரணமின்றிச் சிரித்தல், வெறிகொண்ட பேச்சுக்களைப் பேசுதல், மறைத்து வைக்கத்தக்க பொருளை வெளிப்படுத்திச் சொல்லிவிடுதல், களிப்பு மிகுதல் ஆகியன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having drunk the fresh, fragrant wine poured into crystal cups,
  2. breaking into open laughter, babbling wild words,
  3. as a lover's pique that will not stay hidden, however one hides it, gives itself away,
  4. so these lovely lotuses betrayed their intoxication — many such they saw.

What the poem says

The "lotuses" are the faces of women who have been drinking wine from crystal cups. They laugh for no reason, chatter wildly and let slip what they meant to keep secret. Their tipsiness shows in their faces just as a lover's hidden sulk always shows, however hard it is concealed. The commentary lists the signs of drink: laughing without cause, wild talk, blurting out secrets and growing merriment.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paḷikku vaḷḷattu vākkum pacu naṟun tēṟal mānti,
veḷippaṭu nakaiya āki, veṟiyaṉa miḻaṟṟukiṉṟa,
oḷippiṉum oḷikka oṭṭā ūṭalai uṇarttumāpōl
kaḷippiṉai uṇarttum cevvik kamalaṅkaḷ palavum kaṇṭār.