கம்பராமாயணம் 5662 · சுந்தர 10.13

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பண் மணிக் குலம் யானையின் புடைதொறும் பரந்த
ஒண் மணிக் குலம் மழை இடை உரும் என ஒலிப்ப;
கண் மணிக் குலம் கனல் எனக் காந்துவ; கதுப்பின்
தண் மணிக் குலம் மழை எழு கதிர் எனத் தழைப்ப.

பொருள் · Meaning in Tamil

பண் மணிக்குல யானையின் - அழகு செய்யப்பட்ட உயர்ந்த இலக்கணங்கள் அமைந்த யானைகளின்; புடை தொறும் பரந்த ஒண் மணிக்குலம் - இருபக்கங்களிலும் பரவியுள்ள அழகிய மணிகளின் கூட்டம்; மழையிடை உரும் என ஒலிப்ப - மேகங்களில் தோன்றும் இடியோசை போன்று பேரொலி செய்ய; கண்மணிக்குலம் கனல் எனக் காந்துவ - கண்ணின் மணியாகிய விழிக்கூட்டம் கனலே போல ஒளி வீசின; கதுப்பின் தண் மணிக்குலம் - கன்னங்களில் அணியப் பெற்ற குளிர்ந்த மணியாகிய முத்துக்களின் கூட்டம்; மழை எழும் கதிர் என தழைப்ப - மேகத்தினின்று வெளிப்படும் சந்திரனே போன்று நிறைந்து விளங்கின.

குலம் என்னும் சொல் முதலில் உயர்வு என்னும் பொருளிலும் பின்னே கூட்டம் என்ற பொருளிலும் வந்தது. மணி என்னும் சொல் முதலில் உயர்வு என்னும் பொருளில் வந்தது. (மணியான பிள்ளை என்னும் உலக வழக்கை எண்ணுக.) பின்னே இரத்தினம், முத்து என்ற பொருள்களில் வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The rows of bright bells hung on both flanks of the elephants of fine breed and adornment
  2. rang like thunder in the clouds;
  3. their eyeballs blazed like fire; the clusters of cool pearls
  4. on their cheeks shone full, like the moon rising from the clouds.

What the poem says

The war elephants are described: bells along their sides clang like thunder, their eyes glow like embers, and the strings of pearls on their cheeks gleam like the moon emerging from a cloud.

The verse plays on the words maṇi, which can mean excellence, a bell, the pupil of the eye or a pearl, and kulam, meaning noble lineage or a cluster.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṇ maṇik kula yāṉaiyiṉ puṭaitoṟum paranta
oṇ maṇik kulam maḻaiyiṭai urum eṉa olippa;
kaṇ maṇik kulam kaṉal eṉak kāntuva; katuppiṉ
taṇ maṇik kulam maḻai eḻum katir eṉat taḻaippa.