கம்பராமாயணம் 5664 · சுந்தர 10.15

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐவரும் பெரும் பூதம் ஓர் ஐந்தும் ஒத்து அமைந்தார் - அந்த ஐந்து சேனைத்தலைவர்களும், ஐந்து பூதங்களும் ஒன்று சேர்ந்தன போல விளங்கியவர்களாய்; கை பரந்து எழு சேனை அம் கடலிடைக் கலந்தார் - பக்கங்களில் பரவிக் கிளம்பிய சேனைகளாகிய அழகிய கடலின் நடுவில் போய்ச் சேர்ந்து கொண்டனர்; தாம் - அவர்கள்; செய்கை வரும் தேரிடைக் கதிர் என - அற்புதமான வேலைப்பாடமைந்த தேர்மீது வருகின்ற சூரியனைப் போல; செல்வார் - விரைந்து செல்வாராயினர்; மெய் கலந்த மா நிகர்வரும் உவமையை வென்றார் - இரு வகை உடல் பெற்ற நரசிம்மத்தை ஒப்பாகச் சொல்லுகின்ற உவமைத் தன்மையை வென்று விளங்கினர்

உலக இயக்கத்துக்குப் பஞ்ச பூதங்களும் ஒன்று சேர்தல் போலப் போர்த்தொழில் நிகழ்த்துவதற்கு இந்த ஐந்து சேனைத் தலைவர்களும் ஒன்று சேர்ந்தனர் என்பது கருத்து. பின்னே ஒரு பாடலில் (5664) பஞ்ச சேனாபதியர்க்கு வஞ்சனை சான்ற ஐம்புலன்கள் உவமையாக வருவதை ஒப்பிட்டு உணர்க. அடுத்த பாடலில் இவர்க்கு பஞ்சேந்திரியங்கள் உவமையாக வருவதையும் காண்க. சனக கொடுமையால் நரசிங்கத்தை வென்றனர் என்பது கருத்துப் போலும். மெய் கலித்தல் - வடிவிலே இரு வகை உடல்கள் சேர்தல். மா - இங்கே நரசிங்கம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They plunged into the lovely sea of the army that spread out on every side;
  2. they rode like the sun in its finely wrought chariot;
  3. they surpassed even the comparison with the beast of blended body;
  4. the five of them were like the five great elements joined together.

What the poem says

The five generals take their places amid the ocean-like army. They ride like the sun in its chariot, and they outdo even Narasiṃha, the man-lion form of Viṣṇu with a body of two kinds, which might otherwise be used as a comparison for them.

Together they resemble the five elements, which combine to make the world go on; here they combine to make war. In the next verse they are compared to the five senses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kai parantu eḻu cēṉai am kaṭaliṭaik kalantār;
ceykai tām varum tēriṭaik katir eṉac celvār;
meykalanta mā nikarvarum uvamaiyai veṉṟār;
aivarum perum pūtam ōr aintum ottu amaintār.