கம்பராமாயணம் 5665 · சுந்தர 10.16

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1முந்து இயம் பல கறங்கிட, முறை முறை பொறிகள்
சிந்தி, அம்பு உறு கொடும் சிலை உருமு எனத் தெறிப்பார்;
வந்து இயம்பு உறு முனிவர்க்கும் அமரர்க்கும் வலி ஆர்,
இந்தியம் பகை ஆயவை ஐந்தும் ஒத்து இயைந்தார்.

பொருள் · Meaning in Tamil

முந்து இயம் பல கறங்கிட - தங்கள் சேனைக்கு முன்பாக பல போர் வாத்தியங்கள் ஒலிக்கும்படியாக; முறைமுறை பொறிகள் சிந்தி - அடுத்தடுத்து நெருப்புப் பொறிகளைச் சிதறவிட்டு; அம்பு உறு கொடுஞ்சிலை - அம்புகள் பொருந்திய வளைந்த விற்களை; உரும் எனத் தெறிப்பார் - இடி போல் ஒலி எழும்படியாக வில் நாணைத் தெறிப்பார்கள்; வந்து இயம்புறு முனிவர்க்கும் அமரர்க்கும் வலியார் - உரியவர்களிடம் வந்து போர்க் கலை கற்பிக்கும் முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் மேற்பட்ட வலிமை உடையவர்கள் அச்சேனாபதியர்; பகையாயவை இந்தியம் ஐந்தும் ஒத்து இயைந்தார் - ஆன்மாக்களுக்குப் பகையாகிய இந்திரியங்கள் ஐந்தும் ஒன்றாக சேர்ந்துவிட்டது போல இணைந்தவர்கள், அப் படைத் தலைவர்.

அம்பு சேர்ந்த வில் நாணைத் தெறிப்பதால் எழும் ஓசை இடியோசை போல் இருந்தது; மேலும், நாண் விறைப்பாக இருப்பதால் தெறிக்கும் போதெல்லாம் நெருப்புப் பொறிகள் பறந்தன. போர்க் கலைகளை அரச குலத்தவர் முதலியோர்க்குக் கற்பிப்பவர் வசிட்டர் போன்ற முனிவர்கள்; கற்பிக்கும் கலையில் அவர்களும் வல்லவர்களாக இருந்தனர் என்பது புராண, இதிகாச வரலாறுகள் தெரிவிக்கும் உண்மையாகும். பஞ்ச சேனாபதியர் அத்தகைய முனிவர்களைக் காட்டிலும் தேவர்களைக் காட்டிலும் வலிமை கொண்டவராகத் தோற்றம் அளித்தனர் ஆன்ம முன்னேற்றத்துக்கு எதிரணி வகுத்துக் கொடுக்கும் ஐம்பொறிகளை உவமையாக்கிய நயம் சிந்திக்கத் தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With many instruments sounding before them, scattering sparks again and again,
  2. they twanged their cruel arrow-fitted bows so they cracked like thunder;
  3. stronger than the sages and gods who come to teach the arts of war,
  4. they were joined like the five senses, which are the soul's enemies.

What the poem says

As the generals advance with music before them, they pluck their taut bowstrings, which crack like thunder and throw off sparks. They are said to be stronger than the sages and gods who teach warfare to princes.

The poet now compares the five to the five senses, which band together as enemies of the soul's progress; the image hints that these warriors too are on the side of evil.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muntu iyam pala kaṟaṅkiṭa, muṟai muṟai poṟikaḷ
cinti, ampu uṟu koṭuñ cilai urum eṉat teṟippār;
vantu iyampuṟu muṉivarkkum amararkkum valiyār,
intiyam pakai āyavai aintum ottu iyaintār.