கம்பராமாயணம் 5666 · சுந்தர 10.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வாசவன் வயக் குலிசமும் - இந்திரனுடைய வெற்றிதரும் வச்சிராயுதமும்; வருணன் வன் கயிறும் - வருணனுடைய வலிய பாசாயுதமும்; ஏசு இல் தென் திசைக் கிழவன் தன் எரிமுனை எழுவும் - குற்றமற்ற தெற்குத்திக்குக்குரிய எமனது நெருப்பை முனையில் கொண்ட தண்டாயுதமும்; ஈசன் வன் தனிச் சூலமும் - சிவபெருமானது வலிய ஒப்பற்ற சூலாயுதமும்; என்று இவை ஒன்றும் - என்று பெருமையாய்ச் சொல்லக் கூடிய இவை ஒன்றும்; ஊசி போழ்வது ஓர் வடுச் செயா - ஊசி ஊடுருவிச் செல்லக் கூடிய (மிகச் சிறிய) ஒரு வடுவையேனும் செய்ய மாட்டாத; நெடும் புயம் உடையார் - பெரிய தோள்களை உடையவர் (படைத் தலைவர்).
ஆங்கிலம் · English translationAI
Translation
- The victorious thunderbolt of Vācavaṉ, the strong noose of Varuṇaṉ,
- the fire-tipped club of the blameless lord of the southern quarter,
- the strong peerless trident of Īcaṉ: not one of these
- could make even a scar as small as a needle-prick on their great shoulders.
What the poem says
The generals' invulnerability is stressed. Indra's thunderbolt, Varuṇa's noose, the flaming mace of Yama, lord of the south, and Śiva's trident, the most feared weapons of the gods, could not leave even a pinprick on their mighty shoulders.