கம்பராமாயணம் 570 · பால 10.18

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பங்கயம் குவளை - தாமரை மலர்களும் கரு நெய்தல் பூக்களும்; ஆம்பல் - செவ்வாம்பல் மலர்களும்; படர் கொடி வள்ளை - பரவியுள்ள வள்ளைக்கொடியின் இலைகளும்; நீலம் செங்கிடை - நீலோற்பல மலர்களும் சிவந்த கிடையாகிய சடைகளும்; தரங்கம் - நீர் அலைகளும்; கெண்டை - கெண்டை மீன்களும்; சினைவரால் - சூல்கொண்ட வரால் மீன்களும்; இனைய - இன்னும் இவை போன்ற நீர் வாழும் உயிர்கள் பலவும்; தேம்ப - (பெண்களின் உறுப்புகளுக்கு ஒப்பு ஆகாமையால்) வருந்தும்படி; தங்கள் வேறு - தங்களுக்குத் (தாங்களே யல்லாமல்) வேறு; உவமை இல்லா - உவமைப் பொருள் இல்லாத; அவயவம் தழுவி - (தங்களது முகம் முதலாய) உறுப்புகளோடு பொருந்தி; சாலும் மங்கையர் - சிறந்த மகளிர்; விரும்பி ஆடும் - விருப்பத்தோடு நீராடுகின்ற; வாவிகள் பலவும் - தடாகங்கள் பலவற்றையும்; கண்டார் - பார்த்தார்கள்.

தாமரை - முகத்திற்கும்; குவளையும் கெண்டையும் - கண்ணுக்கும், ஆம்பல் - வாய்க்கும், வள்ளை - காதுக்கும், நீலம் - கூந்தலுக்கும், கிடை - அதரத்திற்கும், அலை - வயிற்று மடிப்புக்கும், வரால் மீன் - கணைக்காலுக்கும் ஒப்பாக அமையாமல் வருந்துகின்றன என்பது உணரப்படுகிறது.

மகளிர் குடைந்து நீராடுவதால் உடல்கள் வருந்துகின்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that the lotus, the blue lily, the water lily, the spreading vaḷḷai creeper, the blue nelumbo,
  2. the red pith, the waves, the keṇṭai fish, the roe-heavy varāl and their like all pined,
  3. the fine women, whose limbs have no likeness but themselves, embracing the water,
  4. bathe with delight in the many pools — these they saw.

What the poem says

Women bathe in the pools. Everything in the water that poets compare to parts of a woman's body sits there feeling outdone, because these women have no equal. The lotus stands for the face, the blue lily and the keṇṭai fish for the eyes, the water lily for the mouth, the vaḷḷai leaf for the ear, the blue nelumbo for the hair, the red pith for the lips, the ripples for the folds of the belly, and the varāl fish for the calves.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṅkayam kuvaḷai āmpal paṭar koṭi vaḷḷai nīlam
ceṅ kiṭai taraṅkak keṇṭai ciṉai varāl iṉaiya tēmpat,
taṅkaḷ vēṟu uvamai illā avayavam taḻuvic, cālum
maṅkaiyar virumpi āṭum vāvikaḷ palavum kaṇṭār.