கம்பராமாயணம் 569 · பால 10.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கடகமும் குழையும்- கைவளைகளையும் காதணிகளையும், பூணும் ஆரமும் - மேலும் பல அணிகளையும் இரத்தின மாலைகளையும், நுண் நூல் - மெல்லிய நூல் இழைகளால் நெய்யப் பெற்ற; கலிங்கம் வடகமும் - கலிங்க நாட்டு விலையுயர்ந்த மேலாடைகளையும்; மகர யாழும் - மகர வீணைகளையும்; வட்டினி கொடுத்து - பந்தயப் பொருளாக வைத்து; வாசத்தொடையல் - மணமுள்ள பூமாலைகளை அணிந்த; அம் கோதை சோர - அழகான (தம்) கூந்தல் தளரும்படி, பளிங்கு நாய் - பளிங்கால் அமைந்த நாய் எனப்படும் காய்கள்; சிவப்பத் தொட்டு - செந்நிறம் அடையுமாறு (அவற்றைத் தம் செங்கைகளால்) தொட்டு; படைநெடுங்கண்ணார் - வேல் போன்ற நீண்ட கண்களையுடைய பெண்கள்; ஆடும் பண்ணைகள் - விளையாடுகிற இடங்கள்; பலவும் கண்டார் - பலவற்றையும் பார்த்தார்கள்.
கலிங்க நுண்ணூல் - 'விலை வரம்பு அறியலாகா இன்னுரைக் கலிங்கம்' - சிந்தா: 697. பளிங்கு நாய்: 'பலகை செம்பொனாகப் பளிங்கு நாயாய்ப் பரப்பி'- சிந்தா:927. வடகம்: மேலாடை, பண்ணை, விளையாடும் இடம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Staking bracelets and earrings, ornaments and necklaces, cloaks of fine Kaliṅga thread
- and makara yāḻs as wagers, while the fragrant
- flower garlands in their lovely tresses slipped loose, touching the crystal pieces till they turned red,
- women with long, spear-like eyes were playing — many such gaming places they saw.
What the poem says
Women are playing a board game with crystal pieces called "dogs" (nāy). They stake their bracelets, earrings, necklaces, fine Kaliṅga muslin and even their yāḻs. They play so eagerly that their garlanded hair comes loose, and the clear crystal pieces look red where their hennaed fingers touch them. The commentary cites similar scenes in the Cīvaka Cintāmaṇi.