கம்பராமாயணம் 572 · பால 10.20

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வெம் சுடர் உரு உற்று அன்ன மேனியர், வேண்டிற்று ஈயும்
நெஞ்சினர், ஈசன் கண்ணில் நெருப்பு உறா அனங்கன் அன்னார்
செம் சிலை கரத்தர், மாதர் புலவிகள் திருத்திச் சேந்த
குஞ்சியர், சூழ நின்ற மைந்தர்கள் குழாங்கள் கண்டார் .

பொருள் · Meaning in Tamil

வெஞ்சினம் உருவிற்று - கொடுமையான சீற்றத்தின் வடிவமெடுத்து; என்னும் மேனியர் - (இவ்வுலகில்) வந்தது போன்ற உடல்வலி உடையவர்களும்; வேண்டிற்று ஈயும் - (வேண்டுகின்றவர்) வேண்டு பொருள்களைத் தருகின்ற; நெஞ்சினர் - அருள் நெஞ்சமுடையவர்களும்; ஈசன் கண்ணில் - சிவனது நெற்றிக்கண்ணில் உள்ள; நெருப்பு உறா - நெருப்புக்கு இலக்காகி எரிந்திடாத; அனங்கன் அன்னார் - (தன் இயல்பான வடிவத்திலே உள்ள) மன்மதனை (அழகில்) ஒத்தவர்களும்; செஞ்சிலைக் கரத்தர் - வில்லேந்திய செங்கை உடையவர்களும்; மாதர் புலவிகள் திருத்தி - பெண்களின் ஊடல்களைத் தவிர்த்து நின்றதனால்; சேந்த குஞ்சியர்- (அதனால்) சிவந்த முடியுடையவர்களும் ஆகிய; சூழநின்ற - இளங்குமரர்களின் கூட்டங்களை; கண்டார் - பார்த்தார்கள்.

சேந்த குஞ்சியர்: மகளிர் கொண்ட ஊடலைத் தணிக்கும் பொருட்டு ஆடவர் அவர்களின் அடிகளிலே தம் முடிகள் படும்படி விழுந்து வணங்குவர். அப்பொழுது அம் மகளிரின் காலிலுள்ள செம்பஞ்சுக்குழம்பு ஆண்களின் முடியில் படுவதால் முடி செந்நிறம் அடைந்தது. குஞ்சி - ஆண் மயிர். 'கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி அடிமேல் வீழ்ந்த கிழவன்'- (தொல். பொருள். கற்பி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Men whose bodies seemed fierce wrath itself in form, whose hearts give whatever is asked,
  2. like Aṉaṅkaṉ before he met the fire of Īcaṉ's eye,
  3. with red bows in their hands, their locks reddened from setting right the sulks of women —
  4. such bands of young men standing around, they saw.

What the poem says

The young warriors of Mitilai stand about in groups. They are fierce in battle, generous to anyone who asks, and as handsome as Kāma was before Śiva burned him with his third eye. Their hair is tinged red because they have been falling at their sweethearts' feet to end lovers' quarrels, and the red lac on the women's feet has rubbed off on their heads. The commentary cites the old grammar Tolkāppiyam, which mentions the lover who falls at his beloved's feet.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veñ ciṉam uruviṟṟu eṉṉum mēṉiyar, vēṇṭiṟṟu īyum
neñciṉar, īcaṉ kaṇṇil neruppu uṟā aṉaṅkaṉ aṉṉār
ceñ cilaik karattar, mātar pulavikaḷ tiruttic cēnta
kuñciyar, cūḻa niṉṟa maintartam kuḻāṅkaḷ kaṇṭār.