கம்பராமாயணம் 573 · பால 10.21

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பாகு ஒக்கும் - சர்க்கரைப் பாகு போன்ற; பலசொல் பல இனிய சொற்களை; பைங்கிளியோடும் பேசி - பச்சைக்கிளியோடும் பேசி, மாகத்து உம்பர் - வானத்தின் மேல் வாழும்; மங்கையர் நாண - தெய்வப் பெண்களும் (தமது வடிவழகிற்குத் தோற்று) வெட்கம் அடையும்படி; மலர் கொய்யும் - பூக்களைப் பறிக்கின்ற; தோகை - (சாயலால்) மயிலையும்; கொம்பின் அன்னவர்க்கு - (மென்மையான உருவத்தால்) பூங்கொம்பையும் ஒத்துள்ள மாதர்களுக்கு; அன்னம் நடை - அன்னம் நடையழகிலே; தோற்றுப் போக - (ஒப்புமை ஆகாமையால்) தோல்வியுற்றுப் பின் செல்ல; கண்டு - அதனைப் பார்த்து; வண்டுஇனம் ஆர்க்கும் - வண்டுகளின் கூட்டம் ஆரவாரம் செய்தற்கு இடமான; பொழில் கண்டார் - சோலைகளைப் பார்த்தார்கள்.

ஒரு செயலில் உயர்ந்தவர் வெல்வதையும் தாழ்ந்தவர் தோற்பதையும் கண்ட பார்வையாளர் வென்றவர்க்கு மகிழ்ச்சியும் தோற்றவர்க்கு அவமானமும் உண்டாகுமாறு ஆரவாரம் செய்வது இயல்பு. அவ்வாறே இயல்பாகப் பேரொலி செய்கிற வண்டுகளை அன்னப் பறவை மகளிர் நடைக்குத் தோற்றுப் போனதற்காக ஆரவாரிப்பதாகக் காட்டுகிறார். தோகைக் கொம்பு: கூந்தலையுடைய மாதர்க்கு உவமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Chatting at length with green parrots in words sweet as syrup,
  2. plucking fresh flowers so that the women of the high heavens are put to shame —
  3. to those women, like peacocks and flowering boughs, the swans lost in grace of gait
  4. and went away; and seeing it, the swarms of bees cheered — such groves they saw.

What the poem says

In the pleasure gardens, women chat with their pet parrots and pick flowers. They are so lovely that even goddesses would feel ashamed beside them. They are graceful as peacocks and slender as flowering branches. The swans, famous for their gait, try to match the women's walk, lose, and slink away. The bees, buzzing loudly as always, seem to be jeering at the losers, the way a crowd shouts at a contest.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pāku okkum col paiṅkiḷiyōṭum pala pēci,
mākattu umpar maṅkaiyar nāṇ malar koyyum,
tōkaik kompiṉ aṉṉavarkku, aṉṉam naṭai tōṟṟup
pōkak kaṇṭu, vaṇṭu iṉam ārkkum poḻil kaṇṭār.