கம்பராமாயணம் 574 · பால 10.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உம்பர்க்கு ஏயும் - (இந்திரன் முதலான) தேவர்களுக்கு (தங்குவதற்கு) ஏற்ற; மாளிகை ஒளி நிழல் - மாளிகை வரிசைகளின் சாயை; பாய - (தன்னிடத்தே) படிவதால்; இம்பர்த் தோன்றும் - நிலவுலகில் காணப்படுகிற; நாகர் தம் நாட்டின் எழில் - வானுலக அழகினை: காட்டி - (தன்னிடம்) காண்பித்து; பம்பிப் பொங்கும் - (அலைகள் மிகுந்து மேலே (தண்ணீர்) பொங்குகின்ற; கங்கையின் ஆழ்ந்த - கங்கா நதிபோல ஆழமாகவுள்ள; படை மன்னன் - சேனைகளையுடைய சனக மன்னனது; அம்பொன் கோயில் - பொன்மயமான அரண்மனை; பொன்மதில் சுற்றும் - சுற்றியுள்ள பொன்னாலாகிய உள்மதிலைச் சூழ்ந்துள்ள அகழியை; கண்டார் - கண்டார்கள்.
நீர்நிலை அகழி: அழகிய பொன்மயமான மாளிகைகளின் வரிசைகளோடு கூடிய அரண்மனையைச் சூழ்ந்துள்ள பொன்மயமான வானுலகத்தின் பிம்பத்தைத் தனது நடுவிலே காட்டும் நீர்நிலையை ஒக்கும் என்றார். அணி: தற்குறிப்பேற்ற வணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the bright reflection of the mansions, fit for the gods, fell upon it,
- showing here on earth the beauty of the land of the celestials,
- deep as the surging, swelling Gaṅgai, the moat that rings
- the golden wall of the lovely golden palace of the king of great armies — this they saw.
What the poem says
The travellers reach the moat around King Caṉakaṉ's golden palace. It is as deep as the Gaṅgai in flood. The golden mansions inside, splendid enough for the gods, are reflected in its water, so the moat seems to hold a picture of heaven on earth.