கம்பராமாயணம் 575 · பால 10.23

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவே போல்
தென் உண் தேனில் தீம் சுவை, செம் சொல் கவி இன்பக்
கன்னிம் மாடத்து உம்பரின் மாடே, களி பேடு ஓடு
அன்னம் ஆடும் முன் துறை கண்டு அங்கு அயல் நின்றார் .

பொருள் · Meaning in Tamil

கன்னி மாடத்து - கன்னிகையர் வாழும் மாடத்தின்; உம்பரின் மாடு- மேல் இடத்திற்கு அருகே; களிபேடோடு அன்னம் ஆடும் - மகிழ்ச்சியோடுள்ள பெட்டை அன்னங்களோடு ஆண் அன்னங்கள் கூடிக் குலாவும்; முன்துறை - முற்றத்திடத்து; பொன்னின் சோதி - பொன்னின் ஒளியும்; போதின் இன் நாற்றம் - பூவின் நறுமணமும்; தென் உண் தேனின் - வண்டுகள் உண்ணும் தேனின்; தீம்சுவை - இனிமையான சுவையும்; செஞ்சொல் கவி இன்பம் - தகுதியான சொற்களால் அமைந்த கவிதை இன்பமும்; பொலிவே போல் - (என்னும் இவை ஒரு வடிவம் எடுத்து) விளங்குவது போல (சீதை தோன்றியதை); கண்டு - பார்த்து; அங்கு அயல் நின்றார் - (மூவரும்) அந்த இடத்திற்கு அருகில் நின்றார்கள்.

சீதை வடிவு: பொன்னின் சோதி, பூவின் நறுமணம், தேனின் தீஞ்சுவை, செஞ்சொல் கவியின்பம் ஆகியவை ஒரு வடிவம் எடுத்தாற்போலச் சீதை விளங்குகிறாள். ஐம்பொறி இன்பம்: ஐம்பொறிகளால் பெறப்படும் இன்பங்களில் ஒளி, நாற்றம், சுவை, ஓசை என்ற நான்கைக் கூறி ஊற்றின்பத்தை உபலட்சணத்தால் உணரவைத்தார். கவி என்பது வளம்பெற்ற சொற்களைத் தனது உயிர்நிலையாகக் கொண்டது. ஆதலால் 'செஞ்சொற்கவி' எனப்பட்டது. 'பொலிவே போல்' என்பதைக் 'கவியின்பம்' என்பதனோடு சேர்க்க வேண்டும். வேறு உரை: பொன்னிலே ஒளி பொலிதல் போலவும், மலரில் நறுமணம் பொலிதல் போலவும், தேனிலே இன்சுவை பொலிதல் போலவும், கவிஞர் பாவில் செவ்விய ஓசையின்பம் பொலிதல் போலவும் (ஒளி முதலியவற்றோடு விளங்குபவளாகி) கன்னி மாடத்தின் மேல் அன்னப்பேடு போன்ற தோழியரோடு பெண் அரச அன்னம் போன்ற சீதை விளையாடும் முற்றத்தைக் கண்டு அருகில் நின்றார்கள். தென் - தேன் என்பதன்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the radiance of gold, the fragrance of a flower — like their very splendour —
  2. the sweet taste of the honey the bees drink, the delight of a poem of perfect words:
  3. up on the maidens' mansion, beside
  4. the forecourt where swans play with their happy mates, they saw her, and stood there close by.

What the poem says

This is the first sight of Cītai. On the terrace of the maidens' palace, near a courtyard where swans play with their mates, the travellers see a figure who seems to be the shine of gold, the scent of flowers, the taste of honey and the delight of fine poetry all given one form. These are the pleasures of sight, smell, taste and hearing, and by naming them Kampaṉ suggests the fifth, touch, as well. The commentary also gives another reading. Cītai plays among her companions like a royal swan among swans, shining as light shines in gold, scent in a flower, sweetness in honey and music in verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṉṉiṉ cōti, pōtiṉiṉ nāṟṟam, polivēpōl
teṉ uṇ tēṉiṉ tīm cuvai, ceñ coṟ kavi iṉpak
kaṉṉim māṭattu umpariṉ māṭē, kaḷi pēṭōṭu
aṉṉam āṭum muṉtuṟai kaṇṭu aṅku ayal niṉṟār.