கம்பராமாயணம் 576 · பால 10.24

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

செப்புங்காலை - (அச்சீதைக்கு உவமை) சொல்லுமிடத்து; செங்கமலத்தோன் முதல் - செந்தாமரை மலரில் வாழும் பிரமன் முதலாக; யாரும் - (எளிய மாந்தர் இறுதியாக) உள்ளவர் எவரும்; எப்பெண்பாலும் கொண்டு - எந்தப் பெண்ணுக்கும் எண்ணத்தகுந்த பகுதிகள் எல்லாவற்றிலும் ஒப்புப் பொருளை ஆராய்ந்து; உவமிப்போர் - உவமிப்பவர்கள்; உவமிக்கும் - உவமானமாக எடுத்துச் சொல்கிற; அப்பெண் தானே - (அப்பெண்களிலே சிறந்த) அத்திருமகளே; ஆயின போது - (சீதையாக அந்த இடத்திற்கு) வந்துள்ளதால்; இங்கு - இந்த இடத்தில்; அயல் வேறு ஓர் ஒப்பு - அத்திருமகளைவிட வேறு ஓர் உவமைப் பொருளை; எங்கே நாடி - எந்த இடத்திலே; எவ்வகை கொண்டு உரைசெய்வேம் - கண்டு எவ்வாறு எடுத்து உரைப்போம்?

சீதைக்கு உவமை கூற இயலாது: ஏனென்றால் அவள் உவமை கடந்தவள். எவ்வாறெனில், எல்லாப் பெண்களுக்கும் எல்லாராலும் உவமையாக எடுத்துச் சொல்லப்படுகிறவள் திருமகள்: அவளே இப்போது மிதிலையில் சீதையாகப் பிறந்திருக்கிறாளே! அப்படியிருக்க அவளுக்கு வேறுயாரை உவமையாகக் கூறமுடியும்?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When it comes to speaking of her, all, from him of the red lotus downward,
  2. whatever woman they would praise, compare her to
  3. that one woman; and since she herself has now become this maiden, what other
  4. likeness could we find here, where could we seek it, how could we tell it?

What the poem says

The poet admits he cannot describe Cītai. Everyone who wants to praise a woman's beauty, from Brahmā down to ordinary people, compares her to Lakṣmī. But Cītai is Lakṣmī herself born on earth, so there is nothing left to compare her to.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ceppumkālaic, ceṅkamalattōṉ mutal yārum
ep peṇpālum koṇṭu uvamippōr uvamikkum
ap peṇ tāṉē āyiṉa pōtu, iṅku ayal vēṟu ōr
oppu, eṅkē koṇṭu ev vakai nāṭi urai ceyvēm.