கம்பராமாயணம் 577 · பால 10.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உமையாள் ஒக்கும் மங்கையர் - உமாதேவி போன்ற சிறப்புடைய மாதர்களும்; உச்சிக் கரம் வைக்கும் - (தங்கள் தலைமேல் கைகளை வைத்து வணக்கம் செய்வதற்குரிய; கமையாள் - பொறுமை முதலிய நற்பண்புகளையுடைய சீதையின்; மேனி கண்டவர் - உடல் அழகைப் பார்த்த மண்ணுலகத்தவர்; காட்சிக் கரை காணார் - இந்த அழகின் எல்லையை (முழுதும்) காணாமல்; இமையா நாட்டம் - (நாங்கள்) இமை மூடப்பெறாத கண்களை; பெற்றிலம் என்றார் - பெறவில்லையே என்று குறை பட்டனர்; அந்தரம் வானத்தவர் எல்லாம் - (இமையாத கண்களைப் பெற்றுள்ள) வான் உலகத் தேவர்கள் எல்லாரும்; இரு கண்ணால் அமையாது - (இந்த அழகைப் பார்க்க) நம்முடைய இரண்டு கண்களால் முடியாது; என்றார் - என்று கூறி வருந்தினர்.
மண்ணவர் விண்ணவர்: சீதையைப் பார்த்தவர்கள் அவளது மேனி யழகிற்கு எல்லை காண முடியாது வருந்தினார்கள். அவர்களிலே நிலவுலகத்தவர் தேவர்களைப் போலத் தமக்கு இமையா நாட்டம் இல்லையே என்று வருந்தினர். ஆனால் அவ் வானத்தவரோ தமக்கு இமையா நாட்டம் இருந்தும் அவை இரண்டாக அமைந்தமையால் சீதையின் அழகை முற்றும் ஒருங்கே பார்க்க அவை போதா என்று குறைபட்டனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Women like Umai herself would raise their hands above their heads to this lady of patience;
- those on earth who saw her form could not reach the end of the sight,
- and said, 'We were not given unblinking eyes'; 'Two eyes are not enough,'
- said all who dwell in the sky above.
What the poem says
Cītai is so beautiful that even women as great as Umā would fold their hands above their heads in reverence to her. People on earth, who must blink, wish they had the unblinking eyes of the gods so they could gaze without a break. The gods, who do have unblinking eyes, complain that two eyes are not enough to take in all her beauty at once.