கம்பராமாயணம் 578 · பால 10.26

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வென்று அம் மானைத் தார் அயில் வேலும் கொலை வாளும்
பின்ற, மானப் பேர் கயல் அஞ்சப், பிறழ் கண்ணாள்
குன்றம் ஆடக் கோவின் அளிக்கும் கடல் அன்றி,
அன்று அம் மாடத்து உம்பர் அளிக்கும் அமுது அன்னாள்.

பொருள் · Meaning in Tamil

அம் மானை வென்று - (புலவர்கள் உவமை கூறும்) அழகியமானை (ப்பார்வையில்) வென்று; தார் அயில் வேலும் -மாலையணிந்த கூரிய வேலும்; கொலை வாளும் - கொலைத்தொழிலில் வல்ல வாளும்; பின்ற - (ஒப்பாகாமல்) பின்னிடும்படியாகவும்; மானம் பேர்கயல் அஞ்ச - (மற்ற பெண்களின் கண்களுக்கு உவமையாகக் கூறப்படும்) சிறந்த பெரிய கயல் மீன்களும் (ஒப்பாகாமல்) அஞ்சிப் பின்னே நிற்கும்படியாகவும்; பிறழ்கண்ணாள்- பிறழும் கண்களையுடைய சீதையானவள்; குன்றம் ஆட - (மந்தர மலை (தன்னிடத்தில்) சுழலும்படி; கோவின் அளிக்கும் - 'கோ' என்னும் ஆரவாரத்தோடு (அமுதத்தைத்) தந்த; கடல் அன்றி - கடலால் அல்லாமல்; அன்று அம்மாடத்து - அக் காலத்திலே அக் கன்னி மாடத்தின்; உம்பர் அளிக்கும் - மேலிடம் தந்த; அமுது ஒத்தாள் - அமுதத்தை ஒத்தவள் ஆவாள்.

கடல் அமுது, சீதை: கடலானது வேறு ஒன்றினால் கடையப்பட்டு மிக நலிந்து பெற்ற அமுதம் இந்தச் சீதைக்கு ஒப்பாகாது; ஏனெனில் மாடத்தின் மேலிடம் ஒரு சிறந்த அமுதத்தை எளிதாகப் பெற்றாற் போல்பவள் இவள். தார் அயில் வேல்; தார் அயில் கொலைவாள் என அமையும். அவ்வாறே, கொலைவாள், கொலைவேல் என அமையும். கோ -ஒலிக் குறிப்பு. இடைச்சொல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Outdoing the lovely deer, making the garlanded sharp spear and the murderous sword
  2. fall back, making the proud great kayal fish shrink in fear, she of the darting eyes
  3. was like a nectar — not the one the sea gave up with a roar as the mountain whirled in it,
  4. but the one the top of that mansion gave forth that day.

What the poem says

Cītai's eyes beat everything poets usually compare eyes to: the doe's eyes, the sharp spear and sword, and the darting kayal fish. She is like nectar, but a better nectar than the one the gods got from the ocean. That nectar came only after the sea was painfully churned with a whole mountain, amid a great uproar. This one the palace terrace simply brings forth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veṉṟu am māṉait tār ayil vēlum kolai vāḷum
piṉṟa, māṉap pērkayal añcap, piṟaḻ kaṇṇāḷ
kuṉṟam āṭak kōviṉ aḷikkum kaṭal aṉṟi,
aṉṟu am māṭattu umpar aḷikkum amutu ottāḷ.