கம்பராமாயணம் 579 · பால 10.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பெருந்தேன் இன்சொல் - பெருமை மிக்க தேன் போன்ற இனிய சொல்லையுடைய; பெண் இவள் ஒப்பாள் - இந்தப் பெண்ணை ஒப்பவளான: ஒரு பெண்ணைத் தான் தரும் - (சிறந்த) ஒரு பெண்ணை நீ படைத்துத் தருக; என்றால் - என்று (தேவர்கள் திரண்டு வந்து) வேண்டினாலும்; நான்முகன் இன்னும் தரலாமே - (படைத்தல் கடவுளான) நான்கு முகங்களையுடைய பிரமனால்தான் இனிமேல் படைக்க முடியுமோ? (முடியாது); அருந்தா - (அமுதத்தைத் தவிர வேறொன்றையும்) உண்ணாத, அந்தத் தேவர் - சிறப்புடைய அத்தகைய தேவர்கள்; இரந்தால் - (திரண்டு வந்து) வேண்டினாலும்; மணி ஆழி - இரத்தினங்களுக்கு இருப்பிடமான கடல்; அமிழ்து என்னும் - அமுதம் என்று சொல்லக்கூடிய; மருந்தே அல்லாது - சிறந்த மருந்தையே மீண்டும் கொடுப்பதல்லாமல்; இனி என் நல்கும் - இனி வேறு எதனைக் கொடுக்க இயலும்?
எடுத்துக் காட்டு உவமையணி: அமுதத்தை அல்லாமல் அதை விடச் சிறந்த ஒரு பொருளைக் கடலால் தர முடியாது: அதுபோலத்தான் படைத்துப் பழகிய மாதரைப் போன்ற பெண்களையல்லாமல் இச் சீதையைப் போன்ற சிறந்த மங்கை ஒருத்தியைப் பிரமனாலும் படைக்க இயலாது. இன்னும் - இதுவரை படைக்கப்பட வில்லை என்பதை உணர்த்தும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If one said, 'Give us one woman to match this woman whose words are sweet as rich honey,'
- could even the Four-faced one produce her now?
- If the gods, who taste nothing else, should beg, what more than the medicine
- called nectar could the jewelled sea now give?
What the poem says
Cītai is unique. Even Brahmā the creator could not make another woman like her if he were asked, just as the ocean, however the gods might plead, could give nothing finer than the nectar it has already given. Brahmā can only make women like those he has always made. The word "still" (iṉṉum) hints that no one like her has ever been made before.