கம்பராமாயணம் 580 · பால 10.28

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அண்டத்து - விண்ணுலகில்; அரசு ஆளும் - ஆட்சிபுரிகின்ற; வினையோர் - நல்வினையுடைய இந்திரன் முதலான தேவர்கள்; மேவும் - விரும்புகின்ற; மேனகை ஆதி - மேனகை முதலான; மிளிர்வேல் கண் - ஒளிமிக்க வேல் போன்ற கண்களையுடைய; இனையோர் - இத் தெய்வப் பெண்கள்; அனையாள் மேனி - அந்தச்சீதையின் மேனியழகை; கண்டபின் - பார்த்த பின்பு; உள்ளத்து இன்னலினோர் - (தத்தம் அழகெல்லாம் சேர்ந்தாலும் அவளது அழகு ஒன்றுக்கும் ஈடாகாது என்று அறிந்து) மனத்தில் சஞ்சலத்தைக் கொண்டவரானார்கள்; தம் முகம் என்னும் - (மேலும்) அந்த மேனகை முதலான பெண்களின் முக மண்டலம் என்கின்ற; பனிதோய் வானின் - குளிர்ச்சி நிறைந்த வானத்தில்; வெண்மதிக்கு - விளங்கும் வெண்ணிறமான சந்திரமண்டலத்திற்கு; என்றும் பகல் அன்றே - (பகல் இரவு என்னும் வேறுபாடு இல்லாமல்) எப்பொழுதும் பகலாகவே இருக்கும்.

தெய்வப் பெண்கள் முகம்: மேனகை முதலான தெய்வ மகளிர் சீதையின் மேனியழகைக்கண்டு நம்முடைய அழகு இதற்கு ஈடாகாது என்று மனம் வாடினர். அதனால் அவர்களின் முகம் பகல்நிலாவைப் போல எப்பொழுதும் ஒளி மழுங்கியிருக்கும் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Once they had seen that maiden's form, Mēṉakai and the rest, desired by those
  2. of good deeds who rule in heaven, with eyes like gleaming spears —
  3. such ones grew troubled at heart; and for the white moon that is their face,
  4. in the cool, dewy sky, it is now always day.

What the poem says

The heavenly dancers, Mēṉakai (Menakā) and the others, whom the gods of Indra's heaven adore, are crushed when they see Cītai, knowing they cannot compare. Their moon-like faces lose their shine for good. It is as if the moon stayed in the daytime sky, where it always looks pale and dim.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉaiyāḷ mēṉi kaṇṭapiṉ, aṇṭattu aracu āḷum
viṉaiyōr mēvum mēṉakai āti, miḷir vēṟ kaṇ
iṉaiyōr uḷḷattu iṉṉaliṉ ōr tam mukam eṉṉum
paṉi tōy vāṉiṉ veṇmatikku eṉṟum pakal aṉṟē.