கம்பராமாயணம் 5739 · சுந்தர 11.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவ் உரை விளம்பக் கேளா - சாரதி சொன்ன அந்த வார்த்தையைக் கேட்டு; விடம் திரண்டு அனைய மெய்யான் - விடமே ஒரு அரக்க வடிவு கொண்டாற் போன்றுள்ள (கறுத்துள்ள) அக்ககுமாரன்; இடம் புகுந்து இனைய செய்த - (அவனை நோக்கி) நமது இருப்பிடம் வந்து இவ்வளவு கொடுந் தொழில்களைச் செய்த; இதனொடும் சீற்றம் எஞ்சேன் - இந்தக் குரங்கை அழிப்பதனோடு, எனது கோபத்தை விடமாட்டேன்; தொடர்ந்து சென்று - மேலும் தொடர்ந்து போய்; உலகம் மூன்றும் துருவினென் - மூன்று உலகங்களிலும் குரங்குகள் எங்கே எங்கேயிருக்கிறது என்று தேடியவனாய்; ஒழிவுறாமல் கடந்து பின் - சிறிதிடமும் விடாமல் முற்றும் எல்லா இடங்களையும் கடந்து சென்ற பிறகு; குரங்கு என்று ஓதும் கருவையும் - இனிமேல் குரங்கு என்று சொல்லக் கூடிய கருப்பத்தில் கருத்தன்மையாக உள்ள கர்ப்பத்தையும் கூட; களைவென் என்றான் - அழித்தொழிப்பேன் என்று சபதம் கூறினான்.
சாரதியின் சொல்லைக் கேட்ட அக்ககுமாரன், குரங்கின் இனத்தையே பூண்டோடு ஒழிப்பதாகச் சபதம் செய்தான். விடம் திரண்டனைய என்னும் உவமை நிறத்தாலும், தொழிலாலும் கொள்ளப்படும். கரனுக்கு உதவியாளராக இருந்த வீரர்களை “ஆலகாலம் திரண்டன்ன ஆக்கையர்' (2885) என முன்னர்க் கூறியது நினையத் தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He whose body was like poison gathered into one, hearing those words spoken,
- said, 'With this one, which came into our home and did these things, my rage will not end;
- I will go on and search all three worlds, and passing over
- every place, I will wipe out even the very seed of what is called a monkey.'
What the poem says
The warning only provokes Akkaṉ, whose dark body looks like poison given solid form, black in colour and deadly in action. He vows that killing this monkey will not satisfy his anger: he will hunt through all three worlds and destroy every monkey, down to the unborn young in the womb.
The commentary compares an earlier description of Karaṉ's warriors as having bodies like the hālāhala poison.