கம்பராமாயணம் 5738 · சுந்தர 11.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்னது ஆம் அச்சொல் கேட்ட சாரதி - அத்தன்மைத்தான இழித்துக் கூறிய சொல்லைக் கேட்ட, தேர்ப்பாகன்; ஐய ! கேண்மோ - (அக்ககுமாரனைப் பார்த்து) 'ஐயனே ! நான் சொல்வதைக் கேட்பாயாக; உலகு இயல் இன்னது ஆம் என்னல் ஆமோ - உலகில் நடைபெறும் செயல்கள் இத்தன்மையானவை என்று துணிந்து கூறமுடியுமா ? (கூற முடியாது); இகழல் - குரங்குதானே என்று இகழ வேண்டாம்; மன்னனோடு எதிர்ந்த வாலி - நம் அரசனாகிய இராவணனோடு முன்வந்து எதிர்த்து நின்று வென்ற வாலி என்பவன்; குரங்கு என்றால் மற்றும் உண்டோ ? - ஒரு குரங்கே யாகும் என்றால் மேலும் சொல்வதற்கு இடம் உண்டோ ? சொன்னது, துணிவில் கொண்டு சேறி” - யான் சொன்னதை உறுதியாக மனத்தில் கொண்டு (இதனிடத்தில் வெற்றிபெற வேண்டுமே என்ற எண்ணத்துடன் செல்வாயாக '; என்று உணரச் சொன்னான் - என்று அக்ககுமாரன் அறிந்து கொள்ளுமாறு கூறினான்.
இராவணன் வாலியின் வாலில் சிறைப்பட்டதை குறிப்பாகக் கூறியதும் குரங்கு ஏளனத்துக்கு உரியதல்ல என்று உணர்த்தியதும் சாரதியின் அறிவுச் சிறப்பைக் காட்டுகின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Hearing those words, the charioteer said, 'Sir, listen!
- Can anyone say the ways of the world are such and such? Do not scorn it, sir!
- If Vālī, who stood against our king, was a monkey, what more need be said?
- Keep what I have said firmly in mind as you go,' he said, to make him understand.
What the poem says
Akkaṉ's charioteer warns him not to underestimate the monkey; no one can predict how things will turn out in this world. He reminds the prince that Vālī, who once defeated their own king, was also a monkey.
He is tactfully alluding to the time when Vālī caught Irāvaṇaṉ in his tail, without saying it outright. The commentary praises the charioteer's good sense.