கம்பராமாயணம் 5737 · சுந்தர 11.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்றவன் - என்று ஐயுற்றவனாகி; உவந்து - மகிழ்வுற்று; விண் தோய் இந்திர சாபம் என்ன நின்ற தோரணத்தின் உம்பர் - வானத்தில் பொருந்திய இந்திர வில்லைப் போல பல நிறத்துடன் விளங்குவதான தோரண வாயிலின் மீது; இருந்த ஓர் நீதியானை - தங்கியிருந்த ஒப்பற்ற நெறியுடையவனான அனுமனை; வன் தொழில் அரக்கன் நோக்கி - கொடுந்தொழிலையுடைய அக்ககுமாரன் பார்த்து; அரக்கர் குழாத்தைக் கொன்றது இக் குரங்கு போலாம் என்றான் - அரக்கர் கூட்டத்தை எல்லாம் கொன்றது இந்தச் சிறு குரங்குதானா என்று கூறி; வாள் எயிறு இலங்க நக்கான் - ஒளி தங்கிய தன் பற்கள் தோன்றுமாறு ஏளனமாகச் சிரித்தான்.
அனுமனின் உவப்புக்குக் காரணம் நல்ல போருக்கு வாய்ப்பு வரவிருப்பது குறித்து. அனுமன், அரக்கனை எண்ணியது முதல் பாட்டில். இங்கு, அரக்கன் அனுமனை எண்ணியது கூறப்பட்டது. இரண்டு எண்ணங்களின் வேறுபாடு நோக்கத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So he thought, rejoicing; and on the arch that stood
- like Intiraṉ's bow touching the sky sat that one of righteous ways;
- the demon of cruel deeds looked at him and laughed so his bright fangs gleamed;
- 'So it seems this monkey is what killed the hosts of demons!' he said.
What the poem says
Aṉumaṉ, glad at the prospect of a worthy fight, sits on the many-coloured gateway arch, which looks like a rainbow against the sky. Akkaṉ looks up at him and bursts out laughing in scorn: is this little monkey really what killed all those demons?
The two verses set the two warriors' first thoughts side by side: Aṉumaṉ's respect for his opponent and Akkaṉ's contempt.