கம்பராமாயணம் 5736 · சுந்தர 11.20

Section சுந்தர காண்டம் / 11. அக்ககுமாரன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"பழி இலது உரு என்றாலும், பல தலை அரக்கன் அல்லன்;
விழி இடை இமைக்கும் மேல்நாள் வேந்தை வென்றானும் அல்லன்;
மொழியின் மற்றவர்க்கு மேலான்; முரண் தொழில் முருகன் அல்லன்;
அழிவில் ஒண் குமரன் யாரோ? அஞ்சனக் குன்றம் அன்னான்.

பொருள் · Meaning in Tamil

அஞ்சனக் குன்றம் அன்னான் - மைந் நீலமலை போல விளங்குகின்ற இவன்; உரு பழி இலது என்றாலும் - இவனுடைய வடிவம் குற்றம் அற்றது என்றாலும்; பல்தலை அரக்கன் அல்லன் - பத்துத் தலைகளை உடைய அரக்கனாகிய இராவணன் அல்லன்; விழிகள் ஆயிரமும் கொண்ட வேந்தை வென்றானும் அல்லன் - ஆயிரம் கண்களைக் கொண்ட தேவேந்திரனை வென்ற இந்திரசித்தும் அல்லன்; மொழியின் - ஆராய்ந்து கூறுமிடத்து; மற்று அவர்க்கு மேலான் - மற்றைய அவர்களுக்கும் (இராவணன் மேகநாதன்) மேம்பட்டவனாகத் தோன்றுகின்றான்; முரண் தொழில் முருகன் அல்லன் - போர்த் தொழிலிற் சிறந்த முருகக் கடவுளும் அல்லன்; அழிவு இல் குமரன் யாரோ ? - கேடு என்பதே இல்லாத பராக்கிரமமுடைய இக் குமரன் யாரோ?.

அனுமன் முன்பே இராவணனையும் இந்திரசித்தையும் பார்த்தவன் (ஊர்தேடு படலம் 4974, 5040 - 5052 காண்க) ஆதலால் வந்திருப்பவன் அவர்களில் ஒருவனல்லன் எனத் தெளிந்தான். போர்த்தொழில் வல்லமையும் வெல்லும் திறனும் உடைய சேவகப் பெருமாளாகிய முருகனை வீரர்க்கு உவமை சொல்வது மரபு; கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர்' (பெரும்பாண் 75-76) எனவும், வென்றி நெடுவேள் (குறுந. ///) எனவும் வந்தன. அறநெறியில் செல்லாத அரக்கர் சார்பினனாக முருகன் வாரான் என்பதால் வருபவன் முருகன் அல்லன் எனத் தெளிந்தான். விழிகள் ஆயிரம் கொண்ட இந்திரனை வென்றவன் மேகநாதன்; இவ்வெற்றியால் இந்திரஜித் எனப் பெயர் பெற்றான். இராவணனுக்கும் இந்திரசித்துக்கும் மேலான பெருவீரம் படைத்தவன் அக்ககுமாரன் எனப் பார்த்த அளவில் கணிக்கிறான் அனுமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Though his form is flawless, he is not the many-headed demon;
  2. nor is he the one who conquered the king with a thousand eyes;
  3. to tell the truth, he surpasses them both; he is not Murukaṉ of warlike deeds;
  4. who can this undying, radiant youth be?' he thought, he who was like a hill of collyrium.

What the poem says

Looking closer, Aṉumaṉ realises the youth is neither of the two he expected. He has already seen Irāvaṇaṉ and Intiracittu while searching the city. This warrior, dark as a hill of collyrium, seems even greater than both of them.

Nor can he be Murukaṉ, the god of war to whom heroes are traditionally compared, since that god would never fight on the side of the unrighteous demons. Aṉumaṉ wonders who this splendid young warrior is.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"paḻi ilatu uru eṉṟālum, pal talai arakkaṉ allaṉ;
viḻikaḷ āyiramum koṇṭa vēntai veṉṟāṉum allaṉ;
moḻiyiṉ maṟṟu avarkku mēlāṉ; muraṇ toḻil murukaṉ allaṉ;
aḻivu il oṇ kumaraṉ yārō? añcaṉak kuṉṟam aṉṉāṉ.