கம்பராமாயணம் 5735 · சுந்தர 11.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எண்ணிய - (நான் இப்போது போருக்கு வருபவராக) நினைத்த; இருவர்தம்முள் ஒருவனேல் - இந்திரசித்து, இராவணன் என்ற இருவர்களுள் ஒருவனாக இருந்தால், யான் முன் செய்த புண்ணியம் உளது - யான் முற்பிறப்பில் செய்த புண்ணியப்பயன் எனக்கு உள்ளது; எம் கோன் தவத்தொடும் பொருந்தினானே - எங்கள் தலைவனான சுக்கிரீவனும் செய்த தவப்பயன் பொருந்தப் பெற்றவனானான்; நானும் நண்ணினன் நின்றேன் - (பல அரக்கர்களைக் கொன்றிட்ட) நானும் (இவனைக் கொல்வதற்கு) சித்தனாக நிற்கின்றேன்; காலனும் நணுகி நின்றான் - (இவன் உயிரைக் கொண்டு போவதற்கு) யமனும் நெருங்கி நிற்கின்றான்; கண்ணிய கருமம் இன்றே கடிதின் முடிக்குவென் - யான் கருதிய காரியத்தை இன்றைக்கே விரைவில் முடித்து விடுவேன்; என்றான் - என்று (அனுமன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If it is one of the two I had in mind, then the merit I earned before
- has borne fruit, and my lord has received the reward of his penance too;
- he has come; I stand here ready; Kālaṉ too stands close by;
- the task I set my heart on I will finish swiftly, this very day,' he said.
What the poem says
Aṉumaṉ continues talking to himself. If the newcomer is Irāvaṇaṉ or Intiracittu, then his own good deeds in past lives, and the austerities of his king Cukkirīvaṉ, have been rewarded.
The enemy is here, he himself is ready, and Death is waiting close by to take the demon's life. He resolves to accomplish his purpose that very day.